தொடர்ந்து 10 மணி நேரம் விஜயால் எப்படி நிற்க முடிந்தது? காரணத்தை சொன்ன தயாரிப்பாளர்

Actor Vijay: விஜயின் அரசியலில் பெரிய பேசு பொருளாக பார்க்கப்பட்டது எப்படி அவரால் தொடர்ந்து 10 மணி நேரம் நிற்க முடிந்தது என்பதைத்தான். இதைத்தான் சோசியல் மீடியாக்களில் பெரிய நியூஸாக போட்டுக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் விஜய் தொடர்ந்து 10 மணி நேரம் நின்றே மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வந்தார்.

இருந்தாலும் அவர் முகத்தில் எரிச்சலோ களைப்போ சலிப்போ தெரியவே இல்லை. மிகவும் புன்முறுவலுடன் ஒரு நாள் முழுவதும் அந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை குஷிப்படுத்தினார் விஜய். விஜயின் இந்த செயல் மாணவர்கள் சமுதாயத்தில் நல்ல ஒரு மாற்றத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: எஸ்.ஏ.சி மட்டும் இல்லைனா விளக்குதான் புடிச்சிருப்பாரு விஜய்! என்ன யோக்கியம் இருக்கு? கோபத்தை கக்கிய பிரபலம்

திரையில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜயை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று எண்ணும் மாணவர்கள் மத்தியில் அவரே இந்த உதவியை வழங்குகிறார் என்றால் கண்டிப்பாக மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது மாணவர்களுக்கான ஒரு மோட்டிவேஷனாகத்தான் மாறியிருக்கிறது.

அந்த விழாவில் ஒரு மாணவியே சொல்லியிருப்பார் ‘எப்படியாவது விஜய் கூட நின்று ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் படித்தேன்’ என்று. இந்தளவுக்கு மாணவர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய். கடந்த வருடம் ஒரே கட்டமாக நடந்த இந்த விழாவில் கிட்டத்தட்ட 13 மணி நேரம் நின்று கொண்டே இருந்தார் விஜய்.

இதையும் படிங்க: பாகுபலி, ஆர்ஆர்ஆர், ஜவான் வரிசையில் சாதனை படைத்த கல்கி! இவ்ளோ கோடி போட்டு எடுத்து இது இல்லைனா எப்படி?

அதனால் இந்த வருடம் இரண்டு கட்ட்மாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இதன் இரண்டாம் கட்டம் ஜூலை 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘அரசியலுக்காக மட்டும் இந்த உழைப்பை விஜய் கொடுக்கவில்லை. சினிமாவிலும் கிட்டத்தட்ட 11 மணி நேரம் உழைப்பை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார் விஜய்’

dhan

dhan

‘7 மணிக்கு சூட்டிங் ஆரம்பித்து மாலை 6 மணி வரைக்கும் இருக்கிறார் விஜய். மேலும் டெடிகேஷனாக நபர்.சிவாஜி, கமல், ரஜினியை போல 7 மணிக்கு சூட்டிங் என்றால் காலையில் 6.30 மணிக்கே வந்து விடுவார் விஜய். அதுவே 11 மணி நேரம் ஆகிவிடுகிறது. அதனால்தான் அந்த விழாவிலும் அவரால் 10 மணி நேரம் இருக்க முடிந்தது.இதற்கெல்லாம் ஒரே காரணம் அடிப்படையில் நல்ல உழைப்பாளி விஜய்’ என தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: நான் எப்படிப்பட்டவன்? சிக்குவேனா? வடிவேலுவுக்கும் பயில்வான் ரெங்கநாதனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா?

 

Related Articles

Next Story