More
Categories: Cinema History Cinema News latest news

ஜெயலலிதாவுக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி தெரியுமா?!.. அட ஆச்சர்யமா இருக்கே!..

மறைந்த திரைப்பட நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவார். இவர் டீன் ஏஜை எட்டியபோது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை சந்தியாவுக்கு இருந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

அப்போது பல ஹிட் படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். அவர் வெண்ணிற ஆடை என்கிற படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார். கதைப்படி கதாநாயகி ஒரு இளம் விதவை. அதேநேரம் மாடர்னாகவும் இருக்க வேண்டும். சித்ராலயா கோபு முலம் நடிகையை தேடிக்கொண்டிருந்தார். பாபு பல பெண்களை பார்த்தும் ஸ்ரீதருக்கு திருப்தி இல்லை. நாட்கள் போனதே தவிர கதாநாயகி கிடைக்கவில்லை.

Advertising
Advertising

ஒருநாள் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நீச்சல் குளத்திற்கு ஸ்ரீதரும், பாபுவும் செல்ல அங்கே 15 வயது மதிக்கத்தக்க ஒரு டீன் ஏஜ் பெண் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தார். துறுதுறு கண்களுடன் நளினமாக நடந்து அவர்களை கடந்து சென்றார். காண்வெண்ட் மாணவியின் முகம், நாகரிகமான தோற்றம் என அனைத்தும் ஸ்ரீதர் தேடிய கதாநாயகி போலவே இருந்தது. அவரை பார்த்ததும் ஸ்ரீதருக்கு பொறி தட்டியது. ‘இவள்தான் என் படத்தின் கதாநாயகி. இவள் யார் என விசாரியுங்கள்’ என சொல்ல, விசாரித்ததில் அவர் நடிகை சந்தியாவின் மகள் என்பதும் அவரின் பெயர் ஜெயலலிதா என்பதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..

2 நாட்களில் ஸ்ரீதர் முன்பு சந்தியா மற்றும் ஜெயலலிதாவை நிறுத்தினார் கோபு. ஸ்ரீதர் வெண்ணிற ஆடை கதையை சொன்னார். ‘யோசித்து சொல்கிறேன்’ எனக்கூறி மகளை அழைத்து சென்றார் சந்தியா. அதன்பின் பாபுவை தொடர்பு கொண்ட சந்தியா ‘ஜெயலலிதா ஒரு கன்னட படத்தில் நடிக்கிறாள். அதிலும் இளம் விதவை வேடம். ஸ்ரீதர் சொல்லும் கதையிலும் இளம் விதவை வேடம். மனசுக்கு கஷ்டமா இருக்கு. எனவே, வேண்டாம் என நினைக்கிறேன்’ என சொல்லிவிட்டார்.

இந்த தகவலை பாபு ஸ்ரீதரிடம் சொல்வதற்கு முன் சந்தியாவிடமிருந்து மீண்டும் போன். பேசியது ஜெயலலிதா. ‘நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பின் எந்த கதாபாத்திரமாக இருந்தால் என்ன?.. நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என இயக்குனரிடம் கூறிவிடுங்கள்’ என தெளிவாகவும், தைரியமாகவும் சொன்னார் ஜெயலலிதா.

இப்படித்தான் தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். அடுத்த படமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல எம்.ஜி.ஆர் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஜெயலலிதா மாறியதுதான் வரலாறு.

இதையும் படிங்க: அந்த சீன் இருக்குறதயே மறந்து படம் பார்க்க வரச் சொன்ன இயக்குனர்! படத்தை பார்த்த ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?

Published by
சிவா

Recent Posts