Connect with us
kamal

Cinema History

5 வயது கமல் நடிக்க எப்படி சான்ஸ் வாங்கினார் தெரியுமா?!.. பிஞ்சிலயே அவர் அப்படித்தானாம்!..

5 வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தார். முதல் படத்திலேயே இரண்டு பெரிய ஜாம்பாவன்களுடனும் கமல் பயப்படாமல் நடித்திருந்தார். மேலும், இவருக்கு அப்படத்தில் பாடல் காட்சிகளும் இருந்தது. ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\ பாடலுக்கு அழகாக நடித்திருப்பார்.

அதன்பின் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்தார். டீன் ஏஜ் எட்டியதும் பாலச்சந்தர் இயக்கிய பல படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி ஹீரோவாக மாறினார். ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பேசும் படம், ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், நாயகன், குணா, மகாநதி, தேவர் மகன், விஸ்வரூபம், தசாவதாரம், விக்ரம் என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் நடித்தவர் இவர்.

இதையும் படிங்க: நானும் எவ்ளவோ ட்ரை பண்றேன்.. முடியல! அனுஷ்கா இப்படி போவாங்கனு நினைக்கல

ரசிகர்களால் உலக நாயகன் என்றும் மற்றவர்களால் கலைஞானி எனவும் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க தேர்வான விஷயம் பற்றி தெரிந்து கொள்வோம்.

kamal

களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க ஒரு சிறுவனை ஏவி மெய்யப்ப செட்டியார் தேடிக்கொண்டிருந்தார். ஏவிஎம் மெய்யப்பசெட்டியார் முன் கமலை நிறுத்தியதும் அவர் ‘எதாவது நடித்துக்காட்டு பாப்போம்’ என சொல்லிவிட்டு மேஜையில் இருந்த விளக்கை கமலின் முகத்தில் அடிப்பது போல் காட்டி ‘ஆக்‌ஷன்’ என சொன்னவுடன், ஐந்து வயது சிறுவனான கமல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் ‘வரி, வட்டி, திரை, கிஸ்தி.. யாரிடம் கேட்கிறாய் வரி?. எதற்கு கேட்கிறாய் கிஸ்தி?.. எங்களோடு வயலுக்கு வந்தாயா?.. களை பறித்தாயா. ஏற்றம் இறைத்தயா?.. இல்லை என்குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா?.. மானம் கெட்டவனே’ என அந்த பிரபல வசனத்தை பேசிக்காட்ட மெய்யப்ப செட்டியார் அசந்து போய்விட்டாரம்.

சிறுவன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறான். தயக்கம் இல்லாமல் வசனம் பேசி நடிக்கிறான்.. தொழில் மீதும் அதிக ஆர்வம் இருக்கிறது. இவன்தான் அந்த சிறுவன் கதாபத்திரத்திற்கு பொருத்தமானன் என முடிவு செய்தாராம். மேலும், உடனே அங்கிருந்தவர்களை அழைத்து ‘களத்தூர் கண்ணம்மாவில் வரும் சிறுவன் கதாபத்திரத்தில் நடிக்கபோவது இந்த சிறுவன்தான்’ என எல்லோருக்கும் சொன்னாராம். இப்படத்தான் கமல் தனது முதல் படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஹார்மோனியத்தை இனிமே தொடமாட்டேன்.. ரஜினியிடம் சவால் விட்ட இளையராஜா – அப்புறம் என்னாச்சு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top