சந்திரமுகிக்காக பயந்து கொண்டே கங்கனாவிடம் சென்ற படக்குழு... அம்மணி சொன்ன பதில் தான் ஹைலைட்டே!

Kangana
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத்திடம் படக்குழு ஓகே வாங்கிய சுவாரஸ்ய சம்பவத்தை வெளியிட்டுள்ளனர்.
பி. வாசு எழுதி இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. கன்னடப் படமான அப்தமித்ரா மற்றும் மலையாளத் திரைப்படமான மணிச்சித்ரதாழுவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Jothika
பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் கணேசன் ஆகியோர் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளனர். மேலும் இது அந்நிறுவனத்தின் 50வது படமாகும். இப்படம் ₹19 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.
சந்திரமுகி 2005ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பல வருட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சரத்குமாருக்காக ரஜினி சொன்ன அட்டகாசமான கதை… படமா வந்திருந்தா தாறுமாறா இருந்திருக்கும்…
இந்த பாகத்தினையும் பி.வாசுவே இயக்கி வருகிறார். ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். சந்திரமுகிக்கு முக்கியமே நாயகி தான் என்பதால் இந்த படத்தில் கங்கனா ரணாவத்தை நடிக்க வைக்க பி.வாசு விரும்பி இருக்கிறார்.

ragava lawrence_Anushka
ஆனால் எப்போதுமே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் கங்கனா இதற்கு ஒப்புக்கொள்வாரா என சந்தேகம் கிளம்பி இருக்கிறது. இருந்தும் தைரியத்தை வைத்துக்கொண்டு அவரிடம் இந்த கதையை கூற சென்றாராம் பி.வாசு. ஆனால் கதை தொடங்கிய 2 நிமிடத்தில் நிறுத்திய கங்கனா, உங்க சந்திரமுகியை நான் பார்த்து இருக்கிறேன். கண்டிப்பாக இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தினை விட இது பல மடங்கு வீரியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மைசூரில் சந்திரமுகி 2வின் படப்பிடிப்பில் கங்கனா கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.