பரியேறும் பெருமாள் படத்தில் எப்படி ஓகே செய்யப்பட்டார் கதிர்..கசிந்த சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தில் நடிகர் கதிர் தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் அக்டோபர் 2016ல் நீலம் என்ற தயாரிப்பு நிறுவனத்தினை துவக்கினார். இதன் முதல் படமாக வெளிவந்தது தான் பரியேறும் பெருமாள். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரியனாக கதிர் நடித்திருந்தார். இவர் சட்டக் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் உயர் சாதியைச் சேர்ந்த ஆனந்தியுடன் நட்பாக பழகுகிறார். இது சாதி பிரச்சனை உருவாக்குகிறது. அவர்களால் பரியன் துன்புறுத்தப்படுவதில் துவங்கி அதில் இருந்து அவர் எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் கதையாக அமைந்து இருக்கும். படமும் பெரிய அளவிலான வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் கதிர் தான் வாய்ப்பு கேட்டு மாரி செல்வராஜை சந்தித்தாராம். அவரை பார்த்த மாரி செல்வராஜ் கதிரிடம் முழுமையான நடிகர் தென்படவில்லை என்பதை நம்பி இருக்கிறாஅர். இதனால் தனக்கு தேவையான பரியனை அவரின் எடுத்து விடலாம் என்பதும் அவரின் நம்பிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்தே, கதிர் அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.