அப்பா போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக்கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன்… அப்படி என்ன நடந்தது தெரியுமா?

Published on: October 21, 2022
குன்னக்குடி வைத்தியநாதன்
---Advertisement---

பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் வாழ்க்கை மாறியதற்கு அவர் அப்பா போட்ட சபதம் தான் முக்கிய காரணமாக இருந்ததாம்.

நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். 1935ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி ஐந்தாவது குழந்தையாக அவர் பெற்றோருக்கு பிறந்தார். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். மூத்த சகோதரர் கணபதி சுப்ரமணியம் மிருதங்க வித்வானாக இருந்தார். சகோதரிகள் சுப்புலட்சுமியும், சுந்தரலட்சுமியும் ‘குன்னக்குடி சகோதரிகள்’ என்ற பெயரில் கர்நாடக இசைக் கச்சேரியை செய்து கொண்டிருந்தனர்.

குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன்

முதல் பல வருடம் வைத்தியநாதனுக்கு இசை ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. இவன் மேல் மட்டும் நீங்கள் அக்கறையே காட்ட மாட்டேன் என்கிறீர்கள்? என்று இவரின் தாயார் தான் தொடர்ந்து கவலையில் இருந்து இருக்கிறார். இதற்கும் ஒரு விடிவுகாலம் வந்திருக்கிறது.

இவர்கள் குடும்ப கச்சேரிக்கு வேறு ஒருவர் வயலின் வித்வானாக இருந்தார். அவர் சரியாக ஒருநாள் கச்சேரிக்கு மட்டம் போட அவர் தந்தைக்கு கடுங்கோபம் வந்திருக்கிறது. அடுத்த நாள் அவரிடம் ஏன் நீ கச்சேரிக்கு வரவில்லை என கடிந்து கொண்டு இருக்கிறார். பார்த்து பேசுங்கள். நான் தான் உங்களுக்கு வயலின் வாசிக்கணும் என மமதையுடன் பேசினாராம்.

குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன்

இது வைத்தியநாதன் தந்தைக்கு மேலும் கோபத்தினை அதிகரித்தது. அப்போது இவரை அழைத்து இன்னும் ஒரே வருடத்தில் இவனைப் பெரிய வயலின் வித்வான் ஆக்குவதாக சபதம் போட்டார். இது வைத்தியநாதனுக்கு ஆச்சரியத்தினை கொடுத்தது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற அடுத்த ஒரு வருடத்திலே வயலினை கரைத்து குடிக்கும் அளவுக்கு கற்றுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.