இது அதுல்ல!.. போஸ்டர்களில் கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ்!.. லியோ பரிதாபங்கள்!..

Actor vijay leo: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. ஏனெனில், ரசிகர்களை மிகவும் கவர்ந்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டருக்கு பின் விஜயை வைத்து இயக்கி வரும் படம் இது. என்னுடைய ஸ்டைல் மற்றும் விஜய் சாரின் ஸ்டைல் இரண்டும் கலந்து உருவான படம் மாஸ்டர்.
ஆனால், லியோ முழுக்க முழுக்க என்னுடைய படம் என சொல்லி பல்ஸை எகிற வைத்தார் லோகேஷ். இந்த படத்தில் தலைப்பு லியோ மற்றும் அதற்காக லோகேஷ் உருவாக்கிய வீடியோவே இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திதிவிட்டது. இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’லாம் அப்புறம்.. முதல்ல ஜவானை ஜெயிக்கணும்!. இது என்னடா லியோவுக்கு வந்த சோதனை!…
லோகேஷ் கனகராஜ் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார். பொதுவாக ஒரு படத்தின் அறிவிப்பை மிகவும் எளிமையாகவே வெளியிடுவார்கள். இந்த நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரின் பெயர் மட்டும் அதில் இருக்கும். ஆனால், லோகேஷ் அதற்காகவே ஒரு ஸ்பெஷல் வீடியோவை உருவாக்கி வெளியிடுவார். இந்த ஸ்டைலை கொண்டு வந்தவரே இவர்தான்.
விக்ரம் படத்திற்கும் அப்படித்தான் ஹைப்பை உருவாக்கினார். லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, இப்போதே பல தியேட்டர்களிலும் முன்பதிவு பற்றி ரசிகர்கள் விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பட்ஜெட்டோ பல கோடி!.. பக்கா ஸ்கெட்ச்!. பேன் இண்டியா போஸ்டர்!.. கல்லா கட்டுமா லியோ!..
அதேநேரம் கடந்த சில நாட்களில் வெளியான லியோ பட போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதோடு, சில ஹாலிவுட் படங்களின் போஸ்டர்களை சுட்டு அதில் கொஞ்சம் மாற்றி போஸ்டர்களை உருவாக்கியிருந்தனர். இதை ரசிகர்கள் கண்டுபிடித்து சமூகவலைத்தளங்களில் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
எல்லாற்றையும் யோசித்து செய்யும் லோகேஷ் எப்படி போஸ்டர் விஷயத்தில் கோட்டை விட்டார் என்பதுதான் தெரியவில்லை. ட்ரோலுக்கு பின் அவர் கண்டிப்பாக உஷார் ஆகியிருப்பார். இனி வரும் லி்யோ போஸ்டர்களாவது ரசிகர்களை கவரும் படி சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்போம்.
இதையும் படிங்க: லியோ படத்தில் நடந்த கொடுமை!.. கதறும் நடன நடிகர்கள்!… இதெல்லாம் நியாயமே இல்ல!..