
Cinema News
முதல் படத்திலேயே வெறுப்பை சம்பாதித்த லைகா.. கோலிவுட்டில் டாப் நிறுவனமாக மாறியது எப்படி?
விஜயின் கத்தி படத்தினை தயாரித்த லைகா நிறுவனம் முதல் படத்தில் மிகப்பெரிய வெறுப்பை ரசிகர்களிடம் சம்பாரித்தது. ஆனால் இன்று இருந்த மொத்த வெறுப்பை விருப்பமாக மாற்றி வைத்து டாப் நாயகர்களை தயாரித்து கொண்டே இருக்கிறது. எப்படி நடந்தது இந்த மேஜிக்.
இலங்கை பிரச்னை கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்த சமயம், லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி படத்தினை வெளியிட பெரும் பிரச்னை உருவெடுத்தது. ராஜ பக்சேவின் ஆதரவான நிறுவனம் தயாரித்த திரைப்படம் தமிழகத்தில் வெளியிடுவதா என பிரச்னை கொழுந்து விட்டு எரிந்தது.
இதையும் படிங்க : சேரன் பட இயக்குநரை டார் டாராக கிழித்த பயில்வான் ரங்கநாதன்!.. பதில் சொல்லமுடியாமல் வடிவேலாவே மாறிட்டாரே!..
ஒரு கட்டத்தில் லைகா நிறுவனத்தினை பெயரை நீக்கிவிட்டே அப்படம் தமிழக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பிரச்னையுடன் படம் ரிலீஸானாலும் மிகப்பெரிய வசூலை லைகாவிற்கு பெற்று கொடுத்தது கத்தி திரைப்படம்.
ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்த நிறுவனத்தால் எந்த படத்தினையும் தயாரிக்க முடியவில்லை. அடுத்து ஜி.வி பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தினையும், விஜய் ஆண்டனியின் எமன் படத்தினையும் தயாரித்து ஒரு இடத்தினை லைகா பிடித்தது.
இதையும் படிங்க: தான் மட்டும் வளர்ந்தால் போதாது! அடுத்தவனையும் வாழ வைக்கனும் – விஜயால் ஒரே நாளில் ஓஹோனு வந்த நடிகர்
அடுத்த சின்ன சின்ன படங்களை தயாரித்து வந்த லைகாவிற்கு ஒரே வருடத்தில் செக்க சிவந்த வானம், 2.ஓ மற்றும் வட சென்னை படங்களை தயாரித்தது. எல்லா படமும் மிகப்பெரிய வசூலை கொடுத்தது. இதை தொடர்ந்து லைகா வெறுப்பை குறைத்து இருந்தது. கோலிவுட்டில் சகஜமான இடத்தினை உருவாக்கியது.
பல போராட்டங்களை கடந்து தொடர்ச்சியாக படத்தினை தயாரித்தது. சமீபத்தில் கோலிவுட்டின் மாஸ் படைப்பான பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களையும் தயாரித்தது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
அடுத்த லைன் அப்பில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் 170வது படம், அஜித்தின் விடாமுயற்சி, சந்திரமுகி 2, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் ஆகிய படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வெற்றி புகழில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பிரபலம் அடைந்தாலும் கூட முதல் நாயகனான விஜயுடன் இன்று வரை மீண்டும் கூட்டணி அமைக்காத காரணம் தான் தெரியவில்லை.