Connect with us

அந்த முல்லைய எத்தன தடவ மாத்துவீங்க? முடியலடா சாமி.!

latest news

அந்த முல்லைய எத்தன தடவ மாத்துவீங்க? முடியலடா சாமி.!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில், இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் தான் மிகவும் ரசிகர்களை கவர்ந்தது என்றே கூறலாம்.

ஆனால் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் இறப்புக்குப் பின்பதாக யாரும் அந்த முல்லை கதாபாத்திரத்தை முழுமையாக ரசிக்கும்படி நடிக்க முடியாது என ரசிகர்கள் பலர் கூறி வந்தாலும், நடிகை காவியா அறிவுமணி அந்த முல்லை கதாபாத்திரத்தில் தற்பொழுது அட்டகாசமாக நடித்து வருகிறார்.

தற்போது தான் காவியாவை முல்லை கதாபாத்திரத்தில் வைத்து ரசிகர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முல்லை கதாபாத்திரம் போன்ற பெண்ணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தை மாற்றப் போவதாக கிசுகிசுப்புகள் எழுந்து வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. அது வேறு ஒரு நிகழ்ச்சிக்காக அந்த பெண் அவ்வாறு உடையணிந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top