கர்ப்பமே இல்லையே...நயன்தாராவுக்கு குழந்தை எப்படி?...பின்னணி இதுதான்?!..
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வந்ததும், இருவரும் லிவ்விங் டூ கெதரில் பல வருடங்கள் இருந்ததும், ஊர் ஊராக இருவரும் ஜாலியாக சுற்றி திரிந்ததும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதிதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென அவரும், நயனும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏனெனில், கடந்த சில மாதங்களாக வெளியான எந்த புகைப்படத்திலும் நயன்தாரா கர்ப்பம் ஆனதாக தெரியவில்லை. அவரின் வயிறும் பெரிதாக இல்லை. அப்படி இருக்க எப்படி நயனுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
எனவே, வாடகை தாய் மூலமே குழந்தை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில், நயன்தாரா உடலில் உள்ள பிரச்சனையால் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர், நடிகையர்கள் பலரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புகின்றனர். பாலிவுட்டில் இது அதிகம் நடப்பதுண்டு. ஷாருக்கான் கூட வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆனது குறிப்பிடத்தக்கது.