எனக்கு பணம் இப்படித்தான் கொட்டோ கொட்டோனு கொட்டுச்சு.. நெப்போலியனின் ஃபிளாஷ்பேக்

nepo
குமரேசன் துரைசாமி என்ற தன் பெயரை சினிமாவிற்காக நெப்போலியன் என மாற்றிக் கொண்டார். முதன் முதலில் உதயம் என்ற படத்தை பார்த்து தான் இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டதாக ஒரு தகவல் இருக்கின்றது. அதன் பிறகு தான் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் நெப்போலியன்.
அவர் நடித்து இதுவரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களான இது நம்ம பூமி ,மறவன், எஜமான் ,எட்டு பட்டி ராசா, சுயம்வரம் ,ஊர் மரியாதை போன்ற பல படங்களை குறிப்பிடலாம். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு அரசியலில் களம் இறங்கினார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் வந்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு திருமணம் ஆகி தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் இருக்கின்றனர்.
தன்னுடைய மகன் தனுஷின் உடல்நலம் கருதி அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் குடி பெயர்ந்தார் நெப்போலியன். அங்கு ஒரு ஐடி கம்பெனியையும் நிறுவி பல தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார். அதுபோக நம்முடைய பாரம்பரியமான விவசாயமும் அங்கு செய்து கொண்டு வருகிறார். தற்போது தான் இவருடைய மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு திரை உலகில் இருந்து முக்கியமான சில பேர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் படமான புது நெல்லு புது நாத்து படத்தில் நடித்த அனுபவம் பற்றி நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த ப் படத்தில் முதல் காட்சியே ஒரு வாத்தியாரை தூக்குல போடுற சீன். அதுவும் முதன் முதலில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன். இப்படி ஒரு காட்சியிலிருந்து ஆரம்பித்தால் விளங்குமா? இதை கேட்டதுமே நெப்போலியன் சோகமாகிவிட்டாராம்.
ஏன்டா உனக்கு சீன் பிடிக்கலையா அப்படின்னு பாரதிராஜா கேட்டாராம். இப்பதான் முதன் முதலில் சான்ஸ் கொடுக்கிறார். ஆமா சார், நீங்க கொடுக்குறது புடிக்கலைன்னு சொன்னா அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில் அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் என சொல்லி இருக்கிறார். இல்ல உன் மூஞ்சிய பாத்தா சரியா இல்ல. கொஞ்சம் இரு அப்படின்னு சொல்லி உடனே அந்த ஸ்பாட்டில் மங்களகரமான டயலாக் எழுதி நடிச்சும் காண்பித்தாராம் பாரதிராஜா.
தமிழ் சினிமாவில் இவர் பேசிய முதல் டயலாக் ‘வர்ற லட்சுமிய யாருடா தடுத்து நிறுத்த முடியும்? நான் எப்பொழுதுமே நல்லதை தான் சொல்லுவேன். நல்லதத்தான் செய்வேன் .ஜனங்க புரிஞ்சுக்கணும். இதுதான் அவர் பேசிய முதல் டயலாக். அதன் பிறகு தான் படிப்படியாக கொஞ்சம் லட்சுமி அவர் பக்கம் வர ஆரம்பித்தது என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் நெப்போலியன்.