சரோஜாதேவி சினிமாவிற்கு வந்த சுவாரஸ்ய கதை... அவருக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-18 11:21:15  )
சரோஜா தேவி
X

சரோஜா தேவி

“கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” எனச் செல்லமாக அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததே பெரிய சுவாரஸ்ய கதை தெரியுமா?

போலீஸ் அதிகாரி பைரப்பாவிற்கு நான்காவது மகளாக பிறந்தவர் ராதாதேவி கவுடா. காவல்துறை தந்தை என்பதால் கண்டிப்பாக இருந்திருப்பாரோ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சரோஜா தேவிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் அவர் தந்தை தான். பாடல் முதல் நடனம் வரை அவருக்கு முறையாக கற்றுக்கொடுத்தார்.

சரோஜாதேவி

சரோஜாதேவி

17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். அப்போதைய காலங்களில், மற்ற சூப்பர்ஸ்டார் நடிகர்களை விட சரோஜாதேவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. சரோஜா தேவி எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை நாயகியாக்க விரும்பிய எம்.ஜி.ஆர்…! நடக்காததால் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க…!

இத்தனை புகழ் பெற்ற சரோஜாதேவியின் முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளியில் தான் சரோஜாதேவி படித்தார். அப்போது அங்கு ஒரு இசை போட்டி நடத்தப்பட்டது. எல்லா போட்டிகளிலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் பழக்கம் இவருக்கு உண்டு. அப்போட்டியில், இந்திப் பாடல் ஒன்றை சரோஜா தேவி பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட நடிகரும் பட அதிபருமான ஹொன்னப்ப பாகவதருக்கு சரோஜாதேவியின் குரல் பிடித்துவிட்டது.

சரோஜா தேவி

சரோஜா தேவி

குரல் மட்டுமல்ல ஏன் இவரை கதாநாயகியாக்க கூடாது என்றும் தோன்றியதாம். அவர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் சரோஜா தேவியினை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. அடுத்த வருடமே திருமணம் என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு 3 வருடத்திற்கு பின்னர் தமிழில் வெளியான எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படம் தான் மிகப்பெரிய நடிகையாக உருமாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story