படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம் செய்த அஜித்... ஷாலினிக்கு காதல் அரும்பியது அங்குதான்!...
சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது மாஸ் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் அஜித். அமர்க்களம் படப்பிடிப்பின் போது நடிகை ஷாலினி மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
ஷாலினியை பார்த்தவுடனே அஜித்துக்கு பிடித்துபோய்விட்டதாம். எனவே, அவர் மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை விரட்டி விரட்டி காதலித்துதான் அவரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்துள்ளார் அஜித்.
இதுபற்றி ஒரு பேட்டியில் கூறிய அப்பட இயக்குனர் சரண் ‘ஒரு காட்சியில் ஷாலினியின் வீட்டிக்கு செல்லும் அஜித் கையில் உள்ள கத்தியால் அவரின் கையில் கிழித்துவிடுவது போல் ஒரு காட்சியை எடுத்தோம். அப்போது நிஜமாகவே ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் வழிந்தது. இதைப்பார்த்த அஜித் படபடப்பாகி தாம்தூம் என ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு மருத்துவமனையையே கொண்டுவந்துவிடார். வலியால் கத்த வேண்டிய ஷாலினியோ ‘நோ பிராப்ளம்’ என்பது போல கூலாக இருந்தார். அப்போதே அஜித்துக்கு ஷாலினி மீது காதல் இருந்தது எனக்கு புரிந்துவிட்டது’ என அவர் கூறியிருந்தார்.
இதுபற்றி ஒருமுறை பேசிய ஷாலினி ‘அடுத்தவருக்கு ஒரு துன்பம் எனில் ஒருவர் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்வாரா? தான் யார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவர் எனக்காக துடிப்பதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது’ என வெட்கத்துடன் கூறியிருந்தார்.
ஷாலினிக்கும், அஜித்துக்கும் காதல் அரும்பியது அந்த தருணத்தில்தான்!...