மொக்கை படமா இருந்தாலும் சிவகார்த்திகேயன் படம் ஓடிடும்! – இதுதான் காரணமாம்!..

Published on: March 21, 2023
sivakarthikeyan
---Advertisement---

சின்ன திரையில் தொகுப்பாளராக இருந்து தற்சமயம் வெள்ளித்திரையில் முக்கியமான தமிழ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகள் என இரண்டு விதமான நடிப்பையும் வெளிக்காட்டி அதை தனது ஸ்டைலாக மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

எனவே சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக நடித்தாலும், ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தாலும் அவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு பிடித்த நாயகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். எனவே தனது திரைப்படங்களில் அவர் கவர்ச்சி காட்சிகளை அனுமதிப்பதில்லை.

பொதுவாக வளர்ந்து வரும் கதாநாயகர்கள் தொடர்ந்து படம் நடித்து வரும்போது ஏதாவது ஒரு படம் ஒழுங்காக ஓடவில்லை என்றாலும் அது அவர்களுக்கு சினிமா மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ப்ரின்ஸ் படத்திற்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்தது.

ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இவர் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாவீரன் திரைப்படத்தின் ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் உரிமைகளே பல கோடிகளுக்கு விற்றுள்ளது.

சின்னத்திரையில் அதிக வரவேற்பு:

Maaveeran
Maaveeran

ஒரு படம் நன்றாக ஓடாத போதும் எப்படி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. இதுக்குறித்து மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தனன் கூறும்போது சிவகார்த்திகேயனுக்கு ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் பார்வையாளர்கள்தான் அதிகம். அவரது திரைப்படங்களை டிவியில் போடும்போது அதிக டி.ஆர்.பி கிடைக்கிறது.

எனவே சிவகார்த்திகேயன் மொக்கையாக ஒரு படம் நடித்தாலும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதை பார்க்க தயாராக உள்ளனர். எனவே சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் குறையாது என அவர் கூறியுள்ளார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.