தமிழ் சினிமாவால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரகுவரன். அவர் இல்லை என்றாலும் அவருடைய புகழும் பெருமையும் ஒட்டுமொத்த சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏழாம் மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் ரகுவரன் அறிமுகமானார். ஒரு சைக்கோ கேரக்டரை எப்படி அடையாளம் கொள்ள முடியும் என்பதை கண்முன் நிறுத்தியவர் ரகுவரன்.
ஐ நோ ஐ நோ ஐ நோ என்ற வசனத்தின் மூலம் அதை தத்துரூபமாக வெளிக்கொண்டு நிறுத்தி இருப்பார் ரகுவரன். அந்தக்கால வில்லன் என்றாலே கன்னத்தில் மரு, முறுக்கு மீசை, கழுத்தில் பெரிய செயின் போன்ற பிம்பத்தை உருவாக்கி விட்டு போயிருந்தார்கள். அதை அப்படியே மாற்றியவர் ரகுவரன். கோட் சூட் போட்ட வில்லன் என்ற ஒரு புதியதொரு பிம்பத்தை உருவாக்கினார்.
ஆரம்ப காலத்தில் வில்லனாகவே நடித்து வந்த ரகுவரனை பிரபல கதை ஆசிரியரும் இயக்குனருமான குகநாதன் தனது மைக்கேல் ராஜ் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வெளியாகி நூறு நாட்களைக் கடந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுவும் அந்தப் பட வெளியீட்டின் சமயத்திலேயே ரஜினி கமல் போன்றவர்களின் படங்களும் வெளியாகின. இருந்தாலும் 100 நாட்களை கடந்து ரஜினி கமலுக்கு ஒரு டப் கொடுத்த நடிகராக அந்த சமயத்தில் இருந்தார்.
ஆனால் இந்தப் பட வெற்றிக்கு பின்னாடி குகநாதனின் ஒரு பிளாஷ்பேக்கும் இருக்கின்றன. இயக்குனர் என்பதைத் தவிர்த்து குகநாதன் சிறந்த கதாசிரியர் ஆவார். கிட்டத்தட்ட நூறு கதைகளை எழுதி சாதனை படைத்தவர். அப்படி ஒரு கதையை எழுதி பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் கொண்டு போய் காட்டினாராம். அவர்களுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போக அவர்கள் கேட்ட ஒரு கேள்விதான் குகநாதனை மிகவும் பாதித்தது.
அதாவது கதை மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் அதை யார் இயக்குவது என கேட்டார்களாம் அந்த கேள்வியை கேட்டவுடன் குகநாதனுக்கு கடுப்பே வந்து விட்டதாம். ஏனெனில் இந்தக் கதையை தானே எழுதி தானே இயக்க வேண்டும் என்ற ஆசையில் தான் வந்திருக்கிறார். ஆனால் அவரிடமே இந்த கதையை யாரை வைத்து இயக்கலாம் என கேட்டார்களாம்.
உடனே குகநாதன் அங்கிருந்து வந்துவிட்டாராம். அன்று இரவு 8.30 மணி. சரியாக 9:00 மணியளவில் பிரபல தயாரிப்பாளராக ராம் நாயுடுவை சந்தித்தாராம். இவர் வருகையைப் பார்த்ததும் ராம் நாயுடுவுக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் இந்த நேரம் வந்திருக்கிறாய் எனக் கேட்க உங்களிடம் ஒரு கதை சொல்ல வேண்டும் எனக்கு கூறினாராம். நாயுடுவுக்கு என்ன நடந்தது என்பதேதெரியாத பட்சத்தில் இந்த கதையை கேட்க அவருக்கும் பிடித்துப் போய் இருக்கிறது.
மேலும் இந்த கதையை நீங்களே இயக்குங்கள் என ராம் நாயுடு சொல்ல அதன் பிறகு தான் ரகுவரனை ஹீரோவாக்கி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் குகநாதன். இந்த சுவாரசிய தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…