அஜித்துக்கு விஜய்க்கும் இருந்த அந்த இடைவெளி!..எப்படி சரியானது?..காலங்கடந்த ரகசியத்தை பகிர்ந்த SAC!..

by Rohini |
ajith_main_cine
X

தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் நடிகர் அஜித். இருவரின் படங்களான வாரிசு மற்றும் துணிவு போன்ற படங்கள் வருகிற பொங்கல் அன்று ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

ajith1_Cine

இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன் இருவரின் படங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இருவரும் தற்போது யாரும் எட்ட முடியாத நிலையில் இருப்பதால் மீண்டும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது பெருத்த ஆர்வத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.

ajith2_cine

இவர்களுக்குள் எந்த பிரச்சினை இல்லை என்றாலும் ரசிகர்கள் கண்டிப்பாக பிரச்சினை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அஜித் மற்றும் விஜய் இடையே பிரச்சினை இருந்ததாக விஜயின் தந்தை சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அவர் கூறும்போது இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது விஜய்க்காக ஷோபனா சாப்பாடு செய்து கொடுத்தனுப்புவார்.

ajith3_cine

ஆனால் அதை அஜித் வாங்கி சாப்பிட்டு இப்பொழுது வரை மேடைகளில் ஷோபனாவின் சாப்பாட்டை பற்றி பெருமையாக சொல்லியிருக்கிறார். இருவரும் உண்மையான நண்பர்களாக இருந்தனர். ஆனால் ஒரு நேரத்தில் இருவருக்குள்ளும் சின்ன பிரேக் வந்தது. அதை நினைத்து நான் மிகவும் வேதனையடைந்தேன். எப்படியாவது இந்த இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என எண்ணினேன். ஒரு பக்கம் ஷாலினி எங்களுக்கு குடும்ப நண்பர். அப்படி நினைக்கும் போது கடவுளா பார்த்து இதற்கு ஒரு வழியை கொடுத்தான். அவர்களாகவே பிரச்சினையை சரிசெய்து கொண்டனர். விஜய் வீட்டுக்கும் அஜித் வருவதும் அஜித் வீட்டுக்கு விஜய் போவதும் நடந்தது. அதன் பின் தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. இப்பொழுது இருவரும் நல்ல நண்பர்களாகவே மாறிவிட்டனர் என கூறினார்.

Next Story