Kanguva: ஞானவேல் ராஜா எப்படி ஏமாந்தார்? சிம்பு, ஷங்கர் படங்கள் இனி அவ்ளோதானா?

Published on: November 15, 2024
kanguva str shankar
---Advertisement---

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் கங்குவா. இந்தப் படத்திற்கு இப்போது கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க…

விஸ்வாசம் ஹிட்

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்னு சிறுத்தை சிவாவும், அஜீத்தும் இணைந்து தொடர்ந்து நாலு படங்கள் பண்ணினார்கள். வீரம் படம் ஹிட் ஆனதும் ஞானவேல் ராஜா சிறுத்தை சிவாவிடம் எனக்குத் தான் அடுத்த படம் பண்ணனும்னு சொன்னாரு.

Also read: Kanguva: படமாடா எடுத்து வச்சிருக்கீங்க?.. நாங்க என்ன பைத்தியமா?!.. பொங்கிய ரசிகர்..

ஆனால் தொடர்ந்து அஜீத்தை வைத்துப் படம் பண்ணினதால தொடர்ந்து ஞானவேல் ராஜாவுக்குப் படம் பண்ண முடியாம தள்ளித் தள்ளிப் போகுது. அப்புறம் விஸ்வாசம் பயங்கர ஹிட் ஆனதும் இந்த முறை எனக்குத் தான் படம் பண்ணனும்னு ஞானவேல் ராஜா சிறுத்தை சிவாவிடம் கேட்டுக் கொள்கிறார்.

பிளாப் அண்ணாத்தே…

ஆனால் இடையில் ரஜினிகாந்த் இந்த முறை எனக்காக விட்டுக் கொடுங்க. அடுத்தமுறை நீங்க இணைந்து படம் பண்ணுங்கன்னு சொல்றாரு. ரஜினியே சொல்லிட்டாரேன்னு ஞானவேல் ராஜா விட்டுக்கொடுத்துடுறாரு. அண்ணாத்தே படத்தை சிறுத்தை சிவா இயக்குறாரு. அது படுபயங்கரமான பிளாப் ஆகிடுச்சு.

கங்குவா உருவான கதை

இப்போ ஞானவேல்ராஜாவுக்கு சந்தேகமா ஆகிடுது. அப்புறம் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்துப் பண்றதுக்காக நான்கு வகை நிலங்கள், ரோமானியர்கள் எல்லாம் வர்றாங்க. கங்குவாவா சூர்யா வந்து நிக்கிறாருன்னு கதை கேட்கும்போது அதுல என்ன ஹீரோயிசத்தைப் பார்த்தாருன்னு தெரியல. வேறொரு தயாரிப்பாளர் அவரு கூட ஜாயின் பண்றாரு.

kanguva
kanguva

பிரபாஸ், அனுஷ்கா வச்சிப் படம் பண்ணின தயாரிப்பாளர் அவர். நடுவுல ஞானவேல் ராஜாவுக்கும், சூர்யாவுக்கும் இடையில் வந்த பிரச்சனையும் சமரசமானது. அப்போது சூர்யா சிறுத்தை சிவா எங்கிட்ட இதுவரை இல்லாத அளவு பட்ஜெட்ல படத்துக்கான கதை சொல்லிருக்காரு. அதுக்கு ‘ஓகே’ சொன்னா நான் கால்ஷீட் தர்றேன்னு சொல்ல அப்படித்தான் கங்குவா படம் தொடங்கியதாம்.

அமரன், லப்பர் பந்து

எப்பவுமே இன்டர்வெலுக்கு முன்னாடி 3 காட்சி, அப்புறம் 3 காட்சின்னு யூகிக்க முடியாத அளவுக்கு வச்சா அந்தப் படம் ஹிட். அமரன், லப்பர் பந்து படத்தைச் சொல்லலாம். ஆனா கங்குவா ஓபனிங்ல இருந்து கடைசி வரைக்கும் கத்தி கத்தி யாருமே ரசிக்க முடியாத அளவுக்குப் பண்ணிட்டாங்க.

gnanavel raja
gnanavel raja

பேக்ரவுண்டு மியூசிக்கை எல்லா இடத்திலும் போடாம இருந்துருக்கணும். பல ரசிகர்கள் படத்தைப் பார்த்து விட்டு வந்து தலைவலியோடு வீட்டுல படுத்துருக்காங்க. எல்லாரும் ஞானவேல் ராஜாவைத் திட்டுறாங்க. எனக்கு அதுல உடன்பாடு இல்லை. அவர் ஒரு தயாரிப்பாளரா கொடுக்க வேண்டிய பணத்தைச் சரியாகக் கொடுத்துருக்காரு.

தவறான கதைத் தேர்வு

கதையை சரியாகத் தேர்ந்தெடுக்காத சூர்யா, இயக்கிய சிறுத்தை சிவா மீதும் தான் தவறு. இந்தப் படம் இதோடு போறது இல்லை. இதற்குப் பின்னால் வரும் வேள்பாரி படத்திற்கும் இப்போது தர்மசங்கடமாகி விட்டது. இந்தப் படத்தின் காட்சியை சில படங்களில் பயன்படுத்தியதாக ஷங்கர் அறிக்கை விட்டுருந்தாரு.

Also read: போங்கப்பா நீங்களாம் தாங்க மாட்டீங்க… மீண்டும் சிறுத்தை சிவாவின் ஸ்கெட்ச்…

அது இந்தப் படம் பார்க்கும்போது தான் தெரியுது. இந்தப் படத்துல அம்புல பாம்பை வைத்து எல்லாம் விடுவார்கள். தேள், பூரான், கரப்பான்பூச்சி எல்லாம் மேல வந்து விழும். அப்படி ஒரு போர் முறை வரும். இது வேள்பாரில வரும். ஆனா சிறுத்தை சிவா அப்படி நான் செய்யலை. பாகுபலியில வர்ற காட்சியோட நீட்சி தான் இது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஷங்கர், சிம்பு படம்

ஆனால் ஷங்கர் வேள்பாரியில் இந்தக் காட்சியை வைக்க முடியாது. இனி கங்குவாவே பிளாப். இதை ஏன் எடுத்துருக்கீங்கன்னு கேட்பாங்க. அப்படி ஒரு ஆபத்தை வேள்பாரிக்கு கங்குவா உருகாக்கி விட்டது. சினிமா எப்பவுமே இப்படித்தான்.

ஒரு படம் ஓடுச்சுன்னா அதே பேட்டர்ன்ல தான் வரும். எஸ்டிஆர் 50 படமும் கிட்டத்தட்ட அதே கதை தான். அதனால சிம்புவுக்கும், ஷங்கருக்கும் கங்குவா படம் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.