More
Categories: Cinema History Cinema News latest news

மன்னாதி மன்னனுக்கே ஆறுதலா!.. புஷ்வானமாகி திரும்பி வந்த ஜெய்சங்கர்… அப்படி என்னதான் நடந்தது?

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெய்சங்கரின் நட்பு ஆழமானது. இருவருக்கும் இடையே பல ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

திமுக ஆட்சியில் இருந்தபோது ஜெய்சங்கர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் ஒரு உதவி கேட்கச் சென்றார். அது ரொம்பவே எளிதான உதவிதான். அதனால் உடனடியாக செய்து தருவதாக கூறினார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவரால் உதவி செய்ய முடியவில்லை. தான் கேட்டதை எம்ஜிஆர் செய்து தரவில்லையே என ஜெய்சங்கர் வருத்தப்பட்டார். ஆனால் அதை விட தன்னால் அவருக்கு உதவி செய்து தர முடியவில்லையே என எம்ஜிஆர் வருத்தப்பட்டது தான் அதிகம்.

Advertising
Advertising

ஒருநாள் எம்ஜிஆரைத் தனியாக சந்தித்த ஜெய்சங்கர் சினிமா உலகுல நாளுக்கு நாள் உங்களோட செல்வாக்கு ஏறிக்கிட்டே இருக்கு. ஆனா திமுகல நாளுக்கு நாள் உங்க செல்வாக்கு குறைஞ்சிக்கிட்டே இருக்கு. உங்களைச் சுற்றி இருக்குறவங்கள்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனா உண்மை நிலை அது இல்ல. அதனால கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க’ன்னு எம்ஜிஆரிடம் துணிச்சலாகத் தன் மனதில் பட்டதை சொன்னார் ஜெய்சங்கர்.

MGR2

ஆனால் அப்போது எம்ஜிஆர் ஜெய்சங்கர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் எம்ஜிஆருக்கு ஜெய்சங்கர் சொன்னது உண்மைதான்னு தெரியவந்தது.

ஆனால் அந்த வருடத்தின் இறுதியிலேயே திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார் என்ற செய்தி வந்தது. அதைத் தெரிந்த உடனே எம்ஜிஆரை சந்திக்க சத்யா ஸ்டூடியோவிற்கு ஓடோடி வந்தார் ஜெய்சங்கர்.

என்னைப் பார்த்த உடனே எம்ஜிஆர் எனது கரங்களைப் பிடித்துக் கொண்டு ‘சங்கர் நீங்க சொன்னபடி நடந்து விட்டது’ என சிரித்தபடி சொன்னார். அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப் பார்த்த உடன் தான் தெரிந்தது அந்த அறிவிப்பினால் அவர் எந்த அதிர்ச்சியையும் அடையவில்லை என்று. அவருக்கு ஆறுதல் சொல்றதுக்காகத்தான் நான் சத்யா ஸ்டூடியோவுக்கே போனேன். ஆனால் அங்கு போய் திரும்பியதும் நான் தெம்பாக வந்தேன்’ என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

Published by
sankaran v

Recent Posts