இளையராஜாவுடன் பல இயக்குனர்கள் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் தான் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்கியுள்ள பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
குறிப்பாக செம்பருத்தி, கேப்டன் பிரபாகரன் படங்களில் வரும் பாடல்கள் எல்லாமே மாஸ் ரகங்கள். கேப்டன் பிரபாகரன் படத்தில் ரெண்டே ரெண்டு பாடல் தான். ரெண்டுமே ரசிகர்களைத் துள்ள வைக்கும் சூப்பர்ஹிட் பாடல்கள்.
பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா என்ற அந்த இரு பாடல்களும் அப்போது எல்லா இசைக்கச்சேரிகளிலும், ஆடல் பாடல்களிலும் தவறாமல் இடம்பெறுவதுண்டு. இது தவிர செம்பருத்தி படத்திற்கும் இளையராஜா 45 நிமிடங்களில் அத்தனை டியூன்களையும் போட்டுக் கொடுத்து இயக்குனரை அசர வைத்தாராம்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சானலுக்கு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைப் பேட்டி கண்டார்.
அப்போது இளையராஜாவின் பயோபிக் எப்படி இருக்கணும்னு சித்ரா லட்சுமணன் கேட்க, அதற்கு தனது ஆசைகளை கோரிக்கைகளாக வைக்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
இளையராஜாவோடு டாகுமென்ட்ரியா இருக்கணும். சாதாரண மனிதனுக்கும் நம்பிக்கையைத் தரும் படமாக இருக்கணும். இளையராஜா கோடியில் ஒருவர். வியாபாரமோ, எமோஷனலோ இருக்கறதை விட 3 விஷயங்கள் அதுல இருக்கணும்.
சேற்றில் இருந்து செந்தாமரையா அவர் மலர்ந்துருக்காரு. அப்படின்னா உலக மக்கள் எல்லாராலும் பாராட்டப்படக்கூடியவர். எந்தவித பின்புலமும் இல்லாமல் ஒரு கலைஞனால் வெற்றி பெற முடியும் என்பதற்கு அவர் உதாரணம்.
உலக இசைக்கு இளையராஜாவின் இசை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இந்த 3 விஷயத்தையும் இளையராஜாவின் பயோபிக் எடுத்துக்காட்ட வேண்டும் என்பது என்னோட கோரிக்கை என்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…