More
Categories: Cinema News latest news

வாரிசு Vs துணிவு : எத்தனை முறை அஜித்தும் விஜயும் மோதியுள்ளனர்?.. ரிசல்ட் என்ன?..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் மற்றும் அஜித். சாதாரணமாகவே இவர்கள் படம் வந்தாலே விழாக்கோலம் பூக்கும். அதுவும் பண்டிகை நாட்களில் வெளிவந்தால் மேலும் திருவிழாக்கோலம்தான்.

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இரு நடிகர்களின் படங்களும் வெளிவருவது இது இரு தரப்பு ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியுள்ளது. இந்த வருட பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு படமும் வெளிவரவுள்ளது. எனவே, இந்தியா பாகிஸ்தான் – மேட்ச் போல ரசிகர்களிடையே எதிர்பார்பை எகிர வைத்துள்ளது. இதற்கு முன் இவர்கள் இருவரும் பலமுறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

Advertising
Advertising

ajith

கடந்த 2000-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம்தான் குஷி. அதற்கு இணையாக பொங்கல் தினத்தன்று அஜித் நடிப்பில் ‘உன்னைக்கொடு என்னைத்தருவேன் திரைப்படம் வெளியானது’. இதில் விஜய் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதேபோல் அதற்கு அடுத்த வருடம் 2001-ம் ஆண்டு ப்ரண்ட்ஸ் மற்றும் தீனா ஆகிய இரு படங்கள் வெளிவந்து இரண்டும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று இருவருக்கும் வெற்றிபடமாக அமைந்தது.

அடுத்து, 2002-ம் ஆண்டு பகவதி மற்றும் வில்லன் திரைப்படங்கள் வெளிவந்தன இதில் வில்லன் படம் மாபெறும் வெற்றி படமாக அமைந்தது. 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் திருமலையும் அஜித் நடிப்பில் ஆஞ்சநேயா படமும் வெளிவந்து. இதுவரை வெளிவராத விஜயின் படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதே சமயத்தில் அஜித்துக்கு பெரும் தோல்வி படமாக ஆஞ்சநேயா விளங்கியது.

2006-ம் ஆண்டு விஜய்க்கு ஆதி படமும் அஜித்துக்கு ‘பரமசிவன்’ படமும் வெளிவந்து இருவருக்கும் அட்டர் பிளாஃப் திரைப்படங்களாக அமைந்தது. அதேபோல 2007-ம் ஆண்டு விஜய்க்கு போக்கிரி படமும் அஜித்துக்கு ஆழ்வார் படமும் வெளிவந்தது. விஜய்க்கு வெற்றி படமாகவும் அஜித்து ‘ஆழ்வார்’ படம் தோல்விப்படமாக அமைந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014-ம் ஆண்டு விஜய்க்கு ஜில்லா படமும் அஜித்துக்கு வீரம் படமும் வெளிவந்து ஜில்லா கலவையான விமர்சனமும் வீரம் வசூல்ரீதியாகவும் படம் வென்றது.

9 வருடங்கள் கழித்து தற்போது வாரிசும், துணிவும் மோதவுள்ளது. இதுவரையில் தளபதி பொங்கலாகவே அமைந்துள்ளது.

இந்த வருடம் தல பொங்கலா இல்லை தளபதி பொங்கலா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: சோவுக்கும் காமராஜருக்கும் இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட்டதா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Published by
சிவா

Recent Posts