Categories: Cinema News latest news

விஜயை மீறி இது நடக்க வாய்ப்பில்லை! லோகேஷுக்கு இந்த நிலைமையா? – அதிருப்தியில் லியோ படக்குழு

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் லியோ. இந்தப் படத்தை லலித் தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தில்அனிருத் இசை அமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இதுவே ரசிகர்களுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

vijay1

இது மட்டும் அல்லாமல் அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் போன்ற பிரபல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். லோகேஷ் விஜய் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் போல தான். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகி வரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது.

படத்திற்கான பிரீ பிஸ்னஸ் 400 லிருந்து 500 கோடி வரை எட்டி இருக்கின்றது. அக்டோபர் 19ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. இன்னும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன், டீசர் வெளியீடு மற்றும் ஆடியோ லான்ச் என அடுத்தடுத்த ட்ரீட்டுகள் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

vijay2

இந்த நிலையில் விஜயின் அடுத்த படத்திற்கான அப்டேட் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாகவும் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அந்த படத்தின் நிறுவனமான ஏஜிஎஸ் தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டது. இந்த தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்டால் லியோ படத்திற்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்க இன்னும் அந்தப் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நிறைய இருக்க இந்த தளபதி 68 படத்தின் அப்டேட் இணையத்தில் வைரலானது லியோ படத்திற்கு பிஸினஸ் அளவிலும் பாதிப்பு தான் என்று கூறியிருக்கிறார். இதே வாரிசு படம் ரிலீஸ் ஆகும் போது லோகேஷிடம் ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

vijay3

அப்போது மிகவும் நாகரிகமாக லோகேஷ் இப்பொழுதுதான் வாரிசு படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. அந்தப் படம் நன்றாக ஓடட்டும். தளபதி 67 கண்டிப்பாக இருக்கும் .அந்தப் படத்தின் அப்டேட்டை மெதுவாக சொல்கிறேன் என்று நாகரிகமாக நடந்து கொண்டார். அப்படிச் சொன்ன லோகேஷிற்கா இந்த நிலைமை என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார். மேலும் இது விஜய்க்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி ஒரு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் ஒரு படம் தயாராகி வரும் நிலையில் திடீரென்று இன்னொரு படத்தின் அப்டேட்டை இணையத்தில் உலா விட்டது என்பது கண்டிப்பாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரே வசனம்!.. வசனகர்த்தாவுக்கு வீடு வாங்கி கொடுத்த எம்.ஜி.ஆர்.. அவர் யார் தெரியுமா?…

Published by
Rohini