கமல் ட்ரீட் மட்டும்தான் இனிக்குமா? என்னோட ட்ரீட்டையும் பாருங்க - ரஜினி பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Rajini Birthday Treat: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் மதிப்புமிக்க கலைஞனாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்து கடைசியாக வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

நெல்சன் இயக்க ஜெயிலர் திரைப்படம் ரஜினியை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றது.உலகமே கொண்டாடிய ஜெயிலர் திரைப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அடுத்ததாக ரஜினி ஜெய்பீம் பட இயக்குனர் த. ச.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என் பொண்ணு அப்படி பேசல!.. வக்காளத்து வாங்கிய வனிதா.. அம்மாவையே மிஞ்சிட்டாங்களா ஜோவிகா?..

இந்த வயசுலயும் மிகவும் சுறுசுறுப்பாக தன் அடுத்த அடுத்த ப்ராஜக்ட்-களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இவரின் இந்த ஆர்வம், சுறுசுறுப்பு இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே அமையும்.

வரிசையாக ஜெயிலர், லால்சலாம், ரஜினி170, ரஜினி 171 என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் வரும் ரஜினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு குசும்பு ஜாஸ்திதான்!.. விஜய், கமல் போட்டோவை போட்டு அப்படியொரு கலாய் கேப்ஷன்?..

பொங்கல் அன்று லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்றிருந்த நிலையில் சில பணிகள் இன்னும் இருப்பதால் பொங்கல் அன்று வருவது கஷ்டம்தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கமல் தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.

திரையுலகை சார்ந்த ஒரு சில பிரபலங்கள் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அதே சமயம் பிறந்த நாள் பரிசாக தனது KH234 படத்தின் அறிமுகத்தையும் வெளியிட்டார் கமல். இதை பார்த்த ரஜினி சும்மா இருப்பாரா?

இதையும் படிங்க: சிவாஜி சொன்ன ‘நோ’வால் நடிகையின் தலையெழுத்தே மாறிய சம்பவம்! எப்படி என்ன நடந்தது தெரியுமா?

அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் நாள் லால் சலாம் படத்தின் முதல் சிங்கிள் மற்றும் ரஜினி 171 படத்தின் முதல் தோற்றம் ஆகியவற்றை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story