அஜித்துடன் டூயட் பாட முடியாததால் சோகத்தில் இருக்கும் பிரபல நடிகை...!
கோலிவுட்டில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித் தற்போது வரை பெண் ரசிகைகள் மத்தியில் அந்த கிரஷ் கொஞ்சம் கூட குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார். வயதானாலும் அவரின் ஸ்டைலான நடையும், அழகும் அப்படியே உள்ளதால் பலரும் அஜித்துடன் இணைந்து டூயட் பாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் அஜித்தோ இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என மிகவும் பொறுமையாகவே அவரின் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24 ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வெளியாக உள்ளது.
பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்ற நிலையில் வரும் 24 ஆம் தேதி வலிமை படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி ஹூமா குரேஷி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, "வலிமை படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். தமிழில் வசனங்கள் பேச படத்தின் இயக்குனர் வினோத் உதவி செய்தார்.
அதேப்போல படப்பிடிப்பு தளத்தில் அஜித் உதவி செய்தார். முதல்நாளே அவருடன் நடிக்க சுலபமாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் அஜித்துடன் டூயட் பாடாதது மிகவும் வருத்தமாக உள்ளது. காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன். இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக உள்ளேன்" என கூறியுள்ளார்.
ஹூமா குரேஷியின் இந்த டூயட் ஆசை இனி வரும் காலங்களில் நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.