உங்க வாய் நீங்க உருட்டுங்க.! அஜித்தின் தீவிர ரசிகை நான்.! பாலிவுட் நடிகை பிதற்றல்.!
எப்போதும் சினிமா நடிகைகள் மற்றும் அதில் வேலை செய்யும் டெக்னீஷியன்கள் அப்படத்தின் புரமோஷன் வேலைகள் மற்றும் அப்படம் குறித்த தகவல்களை கேட்கும் போது, நான் இந்த பட கதாநாயகனின் தீவிர ரசிகை /ரசிகர் இவருடன் பணியாற்ற நான் காத்துக்கொண்டிருந்தேன். மீண்டும் இவர் படத்தில் நான் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்,
இந்த டயலாக்குகளை பேசாத நடிகைகளே இல்லை எனும் அளவிற்கு பெரும்பாலான நடிகைகள் பேசி விட்டனர். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் வலிமை பட நாயகி ஹியூமா குரேசி.
இவர் அண்மையில் வலிமை குறித்து பேசுகையில், அஜித் மிகவும் நல்ல மனிதர். அவருடைய நல்ல மனித பண்பும், குணமும் என்னை மிகவும் ஈர்த்தது. நான் தீவிர அஜித் ரசிகை. அவருடன் மீண்டும் தொடர்ந்து பணியாற்ற மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். என பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்களேன் - இப்போதான் விஜய் சேதுபதி பழைய நிலைக்கு வருகிறார்.! என்னான்னு கண்டுபிடிங்க.!?
உண்மையில் அஜித் நல்ல மனிதர் தான். இத்தனைநாள் அஜித்தை பற்றி கூறாத ஹுமா குரேஷி, தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்த பிறகு, அதுவும் அப்பட ரிலீஸ் சமயத்தில் இந்த மாதிரி பேசியிருப்பது வழக்கமாக நடிகைகள் பேசுவது போல் ஆகிவிட்டது.
வலிமை ரிலீசுக்கு பிறகும் இந்த டயலாக்குகளை மாற்றாமல் அப்படியே கூறினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.