More
Categories: Cinema News latest news

கமல் ஆசைக்காக ஹெச்.வினோத் செய்த செயல்… அடடே என்ன பாசமா? இல்ல அடுத்த பட வாய்ப்புக்கா?

KamalHassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் KH233 படத்தின் பெயர் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதிலும் ஒரு ட்விஸ்ட்டை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் தன்னுடைய அடுத்த படத்தின் ரிலீஸில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். இந்தியன் 2 படத்தின் கடைசி கட்ட பணிகள் இறுதி கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. இதையடுத்து கமல் தன்னுடைய அடுத்த படத்தில் ஹெச்.வினோத்துடன் இணைய இருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் KH233 என அழைக்கப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க:படுக்க வச்சே எடுக்குறான்! ஒரு வேளை தப்பான படத்துல நடிக்கிறோமோ? ராதாரவியை பயமுறுத்திய அந்த படம்

முதலில் இப்படம் விவசாயத்தினை மையமாக வைத்து உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் இப்படத்தின் கதை மிலிட்டரி பேக் ரவுண்ட்டை வைத்து உருவாக இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து கமலின் வொர்க் அவுட் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் ரிலீஸாகி ஹிட் அடித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் தெலுங்கில் உருவாக இருக்கும் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படம் வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. இப்படத்தினை கமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

இந்நிலையில் இப்படத்தின் பெயரை மர்மயோகி என வைக்க திட்டமிட்டு இருக்கின்றனராம். இதே பெயரில் கமலும் ஒரு படத்தினை உருவாக்க எண்ணி இருந்தார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே படம் கைவிடப்பட்டது. அப்படம் கமலின் முக்கிய படங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் மர்மயோகி. அப்படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல் ஏற்கனவே வாங்கி வைத்து இருந்தார். அதனால் இந்த 233வது படத்தின் பெயருக்கு மர்மயோகி என்றே டைட்டில் வைக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts