Cinema News
படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எனக்கு அதே பிரச்சனைதான் – ஓப்பனாக பேசிய ஹரிஷ் கல்யாண்..
ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு, பியார் பிரேமே காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானாவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக, தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் (let’s get married) படம் வரும் 28ம் தேதி வெளியாகயுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
நடிகை நதியா ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்துதள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் வரும் பிரச்சனை தற்போது எனக்கு நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறது என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாணுக்கு கடந்த அக்டோபர் மாதம் தான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் படத்தின் கதையை திருமணத்திற்கு முன்பே கேட்டு, கதை பிடித்திருந்ததால், ஒகே சொல்லிவிட்டேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு தான் கதையில் இருக்கும் உண்மை தன்மை புரிகிறது. இந்த கதையை அனைவராலும் எளிதில் ரிலேட் செய்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். படத்தில் ஹீரோ கதாப்பாத்திரம், காதலிக்கும் தாய்க்கும் இடையே சிக்கி தவிப்பது போல இருக்கும்.
காதலிக்கு சப்போர்ட் பண்ணவும் முடியாமல், தாயை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் முழிக்கும் இந்த ஹீரோ கதாப்பாத்திரத்தை தற்போது என் வாழ்க்கையோடு, தொடர்ப்புபடுத்திக் கொள்ள முடிகிறது. நானும் இப்போது அதே நிலைமையில் தான் இருக்கிறேன். என் மனைவிக்கும், தாய்க்கும் இடையே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறேன்.
எனவே இந்த படம் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்று ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார். திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்குள் பேட்டியில் எல்லாம் புலம்ப தொடங்கிவிட்டார் ஹரிஸ் கல்யாண் என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க- சிம்புக்கு கதை சொன்னேன்! ஆனா? மிஷ்கின் சொன்ன தரமான சம்பவம்