முதல் படத்திலேயே அப்படி நடிக்க சொன்னாங்க! எம்ஜிஆர் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை

by Rohini |   ( Updated:2023-06-22 07:23:48  )
mgr
X

mgr

எம்ஜிஆர் படம் என்றாலே சண்டை காட்சிகள் காதல் காட்சிகள் தாய் பாசம் என அனைத்தும் கலந்த கலவையாகவே இருக்கும். இவர் படத்தில் இடம்பெறும் ஒரு சில பாடல்களில் கவர்ச்சி இருந்தாலும் முகம் சுளிக்கும் அளவுக்கு தெரியாமல் இருக்கும். பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் டிரெஸ்ஸிலிருந்து எல்லாமே எம்ஜிஆர் முடிவு செய்த பிறகுதான் காட்சிகள் படமாக்கப்படுமாம்.

mgr1

mgr1

இந்த நிலையில் பழம்பெரும் நடிகை ராஜஶ்ரீ எம்ஜிஆர் உடன் நடித்த அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் முன்னதாக கூறியிருந்தார் .அந்த பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்ரீ தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நடிகையாக எம்.ஜி.ஆர் நடித்த கலை அரசி என்ற படத்தில் தான் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தார். அதுவும் அந்தப் படத்தில் பானுமதி முதன்மையான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

ஒரு பக்கம் எம்ஜிஆர் ஒரு பக்கம் பானுமதி இவர்களை பார்க்கும்போது முதன் முதலில் எனக்கு நடுக்கமே வந்துவிட்டது என்று ராஜஸ்ரீ அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான் முன்னதாக எம்ஜிஆருக்கு கால் உடைந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.

mgr2

mgr2

அப்போது அங்கிருந்த சில நண்பர்கள் என்னிடம் எம்ஜிஆருக்கு இப்பொழுதுதான் கால் உடைந்து சரியாகி வந்திருக்கிறார் என்று கூறியிருந்தார்கள். அந்தப் படத்தில் என்னோட கதாபாத்திரம் எதுவும் தெரியாத ஒரு சுறுசுறுப்பான நங்கையின் கதாபாத்திரம் போல இருக்கும்.

ஒரு காட்சியில் எம்ஜிஆர் அறையின் உள்ளே கட்டிலில் அமர்ந்திருப்பார். நான் துரு துருவென பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே அந்த அறைக்குள் வந்து நேராக அந்த கட்டிலில் போய் விழ வேண்டும். எம்ஜிஆர் இருப்பது தெரியாமல் நேராக அவர் மடியிலே போய் விழ வேண்டும்.

2,3 டேக்குகள் எடுத்தார்கள். நான் நேராக ஆடிக்கொண்டே போய் எம்ஜிஆர் அருகில் போய் நின்று விடுவேன். கட் கட் என்று சொல்லி மறுபடியும் எடுத்தார்கள். ஆனால் நான் எம்ஜிஆர் மடியில் போய் விழாமல் நின்றேன். அங்கிருந்தவர்கள் எம்ஜிஆர் மடியில் போய் விழவேண்டும் என கூறினார்கள். நான் முடியாது என்று சொன்னேன்.

mgr3

rahasri

அதன் பிறகு காரணத்தைக் கேட்க அவர் இப்பொழுதுதான் கால் உடைந்து ஓரளவு சரியாகி வந்திருக்கிறார். மீண்டும் அவர் மீது நான் விழும்போது என்னுடைய வெயிட் தாங்காமல் ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது என்று ராஜஸ்ரீ கூறினாராம். இதைக் கேட்டதும் எம்ஜிஆர் இப்பொழுது ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகி விட்டது. டைரக்டர் சொல்கிற மாதிரி நடி என்று சொன்னாராம்.

இதையும் படிங்க : கணவர் மீது பொய் புகார்.. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ரக்சிதா… ஏம்மா இதெல்லாம் தேவையா!..

Next Story