மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க தயார்!.. ஃபிளாப் படங்களால் இறங்கி வந்த சந்தானம்...
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் சந்தானம். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடனும் காமெடி நடிகாரக நடித்துள்ளார். அவரின் டைமிங் காமெடி பல படங்கள் செமயாக வர்க் ஆவுட் ஆனது. சந்தானத்தின் காமெடிக்காவே, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி என பல படங்கள் வெற்றி பெற்றது.
ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென அவர் என்ன நினைத்தாரோ, யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. திடீரென ஹீரோகவாக அவதாரம் எடுத்துவிட்டார். அவரும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து பார்த்துவிட்டார். பெரிதாக எந்த படங்களும் ஓட வில்லை. உடல் எடையை குறைத்து, ஹேர்ஸ்டைல், தாடி என பக்காவாக மாறி, எல்லாம் முயற்சிகளையும் செய்து பார்த்து சலித்துவிட்டார்.
பார்க்க ஹீரோ மாதிரி தெரிந்தாலும், ஸ்டைல், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ் என எல்லாவற்றையும் நன்றாக செய்தால் தானே ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதிலும் பல ஆண்டுகளாக காமெடி நடிகாரக பார்த்தவரை திடீரென ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதன் பிறகு சமீப காலமாக பெரும்பாலும் காமெடி கலந்த ஹீரோ படமாக தேர்வு செய்து நடித்துவருகிறார் சந்தானம். இந்நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள காமெடி பேய் படமான டிடி ரிட்டர்ன்ஸ் படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித் அவர், நல்ல கேரக்டராக இருந்தால், மற்ற ஹீரோ படத்தில் காமெடி நடிகாராக நடிக்கவும் நான் தயார் தான் என்று கூறியுள்ளார். இது சந்தானத்தின் ரசிகர்களுக்கு குட் நியூஸ் தான் என்றாலும் மீண்டும் இத்தனை ஆண்டுகள் கழித்து காமெடி பட வாய்ப்புகள் அவருக்கு வருமா என்பது சந்தேகம் தான்.
இதையும் படிங்க- வனிதா என்னை தூக்கி போட்டு மிதித்தார், வலி தாங்க முடியல- நடிகை துஷாரா கதறல்!!