வால்போஸ்டரால் தான் சினிமாவுக்கு வந்தேன்… பெயர் வைக்க இதுதான் காரணம்…நானி பகிர்ந்த சுவையான தகவல்

#image_title
நானி தன் சினிமா நிறுவனத்திற்கு வால்போஸ்டர் சினிமா என பெயர் வைத்த காரணத்திற்கான சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு சினிமா ஆசை எப்படி வந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
நானி கூறியிருப்பதாவது : நான் சிறுவயதாக இருக்கும் போது தூர்தர்ஷன் சேனல் மட்டும்தான் இருக்கும். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் போடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு படம் மட்டும் போடுவார்கள். அப்போது பிளாக் அண்ட் ஒயிட் என்றால் பழைய படம் கலர் படம் என்றால் புது படம் அவ்வளவு தான் தெரியும். நான் பள்ளிக்கு செல்லும் வழியில் சத்தியம் தியேட்டர் ஒன்று இருக்கும். அதில் வெள்ளிக்கிழமை புதுப் படம் திரையிடுவார்கள். அந்த காலகட்டத்தில் சுவர்களிள் அழகான வால் போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள். அதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படும். ஆனால் இப்போது வரும் டிஜிட்டல் போஸ்டர்களில் அந்த மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.

அப்போதெல்லாம் என் மனதில் ஒன்றே ஒன்று தோன்றும். என்றாவது ஒருநாள் நானும் சினிமாவுக்கு வர வேண்டும். அப்போ என்னுடைய போட்டோவும் இந்த வால் போஸ்டரில் அழகாக இருக்கும் என்று. அதனால்தான் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு வால் போஸ்டர் சினிமா என பெயர் வைத்தேன். கதை யாரும் வேண்டுமானாலும் எழுதலாம். அந்த கதையை படமாக எழுதுவது மிகவும் கடினம். அப்படி எழுதும் திறமை உடையவர்கள் இயக்குனர்களாக மாறுகின்றனர். நான் என்னுடைய கரியரில் தோல்வி படம் தந்த இயக்குனரை மீண்டும் தேர்வு செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல. நான் அந்த இயக்குனர்கள் கதை சொல்லும் விதத்தையும் அவர்களின் நம்பிக்கையையும் நம்புகிறேன். என் திரைப்படங்களில் மோசமான திரைப்படம் என்று எதுவும் இல்லை. சரியாக போகாத திரைப்படங்களைக் கூட சில நேரங்களில் நான் ரசித்துப் பார்ப்பேன் என்றார்.
சமீபத்தில் வால்போஸ்டர் சினிமா தயாரிப்பில் வெளியான கோர்ட்: state vs nobody திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நானி தயாரித்து நடித்திருக்கும் 'ஹிட் 3' திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. நானி, சாய் பல்லவி உடன் இணைந்து நடித்த சியாம் சிங்கராய் திரைப்படம், மிருனாள் தாகூருடன் இணைந்து நடித்த ஹாய் நானா திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.