அப்டேட் உங்க இஷ்டத்துக்கெல்லாம் தர முடியாது… வரப்ப கண்டிப்பா வரும்.. சேரன் கொடுத்த ஷாக்!

0
456

இயக்குனர் சேரன் பல நாட்களாக சினிமாவில் தலை காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். அவர் தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கிறார். அவரின் தமிழ்குடிமகன் படம் தற்போது ரிலீஸாகி இருக்கிறது. அதன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சேரன் காட்டமாகவே பேசி இருக்கிறார்.

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் சேரன். முதலில் அவருக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதன்பின்னர் மீராமிதுன் அவர் மீது தவறான பழியை போட அது இல்லை என குறும்படம் மூலம் நிரூபிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அவருக்கு ஒரு கூட்டம் உருவானது. மேலும் சக போட்டியாளரான லாஸ்லியாவுக்கு அப்பா மாதிரி அவர் இருப்பதும் அவர் மகள் போல பாசம் காட்டினார்.

இதையும் படிங்க: காருக்குள்ள ஜிப்பை கழட்டி விட்டு கண்டதை காட்டுறியேம்மா!.. ஓவியாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!..

இருவருக்கும் ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் திடீரென நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஒரு பெரிய ப்ரேக் எடுத்துக்கொண்டார்.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம்.சி.எஸ் இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சாதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சேரன் முக்கிய வேடம் ஏற்று நடித்து இருக்கிறார். இப்படம் திரைக்கு வந்திருக்கிறது. சுமார் வரவேற்பினை பெற்று இருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: 4 விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு!.. ஷாருக்கானை தளபதியா மாற்றிய அட்லீ.. ஜவான் விமர்சனம் இதோ!

இதையடுத்து கன்னடா நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து சேரன் ஒரு பேன் இந்தியா படத்தினை இயக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கிச்சா47 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிப்பில் பிஸியாகி இருந்த சேரன் தற்போது மீண்டும் டைரக்‌ஷன் சைட் திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சேரனிடம், கிச்சா சுதீப் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. உங்க இஷ்டத்துக்குலாம் தர முடியாது. அப்போ அப்போ என்ன சொல்லணுமோ அத சொல்லிட்டு தான் இருக்கோம். வரப்ப எல்லாம் வரும் என கோபமாக தெரிவித்து இருக்கிறார்.

 

google news