ரகுவரன் விஷயத்தில் இத நான் பண்ணியிருக்கவே கூடாது!.. மனம் திறந்த ரோகிணி..
கோலிவுட்டில் நம்பியாருக்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரளவைத்தவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக ரகுவரன் திகழ்ந்தார். குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்.
ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ரகுவரன். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து அங்குள்ள சினிமா உலகிலும் நல்ல பெயரை பெற்றவர். ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஆனால் சில பல காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் ரகுவரனுக்கு ஒரு அஞ்சலி செலுத்தும் விதமாக ரோகிணி ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த ஒரு சில பேர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ரோகிணி ரகுவரனை பற்றிய தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்தார்.
அந்த விபரம் பின்வருமாறு: ரகுவரன் எப்பொழுதும் சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர் .அந்த கதாபாத்திரமாகவே வீட்டிலும் வாழ்வார். உதாரணமாக ஊட்டியில் ஒரு படப்பிடிப்பு என்றால் அந்த ஊட்டி குளிருக்கு ஏற்ப கோடை காலத்திலும் வீட்டில் முழுவதுமாக கம்பளி ஆடையை போர்த்திக் கொண்டுதான் இருப்பாராம். அப்பொழுதுதான் குளிர்காலத்தில் உடல் தகவமைப்பு எப்படி இருக்கும் என்பதை வீட்டில் பயிற்சி மூலமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பாராம்.
ரோகினி திருமணம் ஆன புதிதில் ரகுவரன் நடித்த அபிமன்யு படம் வெளியாகி இருக்கிறது .அந்த நேரத்தில் வீட்டில் எப்பொழுதும் ஒரு டெரரான கோபத்துடனே ரகுவரன் இருந்தாராம். ஆரம்பத்தில் இதைப்பற்றி தெரியாத ரோகிணிக்கு முதலில் வியப்பாக இருந்ததாம். அதன் பிறகு தான் ரகுவரனின் தாய் ,"படப்பிடிப்பில் ஏதோ ஒரு காட்சியில் நடித்துக் கொண்டு வந்திருக்கிறான் .அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறான் "என்று கூறினாராம்.
இப்படி சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர் ரகுவரன் .மேலும் நடிகை சாவித்திரியின் இறுதி நாள் சமயத்தில் அவருடன் யாருமே இல்லையே, யாராவது இருந்திருக்கலாமே என்று ரோகினி மனம் வருந்தியதாக கூறினார். அதேபோல ரகுவரன் இறுதி நாளிலும், தான் இருந்திருக்கலாமோ என்று வருத்தப்பட்டதாக கூறினார்.
மேலும் எங்களுக்குள் என்ன நடந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை .
ஆனால் என்னையும் மீறி என் மகனையும் மீறி ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதனால் தான் ரகுவரனை விட்டு நான் பிரிந்து விட்டேன் .ஆனாலும் அதன் பிறகு எங்களுக்குள் ஒரு நட்பு இருந்தது .இருந்தாலும் இன்னும் சிறிது காலம் அவருடன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் இப்பொழுது வரை என் மனதில் வருடிக் கொண்டே இருக்கின்றது என்று ரோகினி கூறினார்.