கணவர் இறந்ததை யாரிடமும் சொல்லவில்லை.. ஆமாம் நான் க்ளாமரா தான் பண்றேன்- உண்மையை உடைத்த சீரியல் நடிகை

செந்தூரப்பூவே, நம்ம வீட்டு பொண்ணு, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை பானுமதி, தற்போது மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிந்துபாத், ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

5 வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் மட்டுமில்லை, இங்கு எல்லாருமே தான் க்ளாமராக இருக்க தான் ட்ரை பண்றாங்க. க்ளாமரா இல்லன, இந்த இடத்தில் இருக்க முடியாது. க்ளாமர் என்பது பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. நான் க்ளாமரா டிரஸ் பண்ண மாட்டேன். ஆனால் க்ளாமரான எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிப்பேன்.

இதையும் படிங்க- நயன்தாராதான் வேணும்.. அடம் பிடித்த ஆர்யா.. போட்டுக்கொடுத்த இயக்குநர்..

நான் ஆசைப்பட்டு நடிக்க வரவில்லை. என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் நடிக்க வந்தேன். ஆனால், இப்போது, இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஈடுபாடோடு வேலை செய்துவருகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி என் நண்பர்களுக்கு கூட தெரியாது.

யாரையும் வீட்டிற்கு அழைத்து வர மாட்டேன். நான் யாரிடமும் என் வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டேன். அனுதாபத்தால் எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டாம். திறமைக்காக கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் யாரிடமும் என் கணவர் இறந்துவிட்டார் என்பதை கூட நான் சொன்னதில்லை. என் மகனை பார்த்துக்கொள்ள நான் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. அதற்காக தான் நான் நடிக்க வந்தேன். இப்போது தான் முதல் முறையாக என் வாழ்க்கையை பற்றி கூறியுள்ளேன்.

சிங்கிள் மதராக குடும்ப செலவையுப் பார்த்துக்கொண்டு, என் மகனையும் வளர்த்து வருகிறேன். மேலும் பல கஷ்டங்கள் என் வாழ்க்கையில் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சாதித்த பிறகு தான் கூறுவேன். அதுவரை யாரிடமும் எதையும் பகிர வேண்டாம் என நினைக்கிறேன் என்று நடிகை பானுமதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..

 

Related Articles

Next Story