வாய்ப்பு கேட்டா இததான் பண்ணுவாரு! வடிவேலுவை பற்றி நடிகை சொன்ன பகீர் தகவல்
வடிவேலு என்றாலே ஒரு பரபரப்பு தான். அதுவும் சமீப காலமாக வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் மாறி மாறி புகார்களை அளித்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த நடிகர்கள் இல்லை என்றால் வடிவேலுவின் நிலையே வேறு என்று அவர்கள் கூறி வருகிறார்கள். இருந்தாலும் இதைப்பற்றி வடிவேலு வாய் திறந்தது இல்லை.
ஆனால் ஒரே ஒரு பேட்டியில் வடிவேலு "என்னை விமர்சித்தவர்களின் நிலைமையை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் சில பேர் இல்லாமல் போய்விட்டார்கள் என்றும் சில பேர் சுகர் வந்து கால் விரல்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்றும் நாசுக்காக பேசி இருப்பார்.
இதுவே ஒரு பெரும் சர்ச்சையாக மாறியது. அதாவது வடிவேலுவை விமர்சித்தால் இந்த நிலைமைதான் இன்று அவர் சொல்லாமல் மிரட்டி இருக்கிறார் என்று செய்திகளில் வெளியானது. இந்த நிலையில் முதல் முறையாக ஒரு நடிகை வடிவேலுவை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் நடிகை தேவி ஸ்ரீ.
சரத்குமார் நடித்த அரசு என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான தேவி ஸ்ரீ வடிவேலு விவேக் இருவருடனும் நகைச்சுவை காட்சிகளில் சேர்ந்து நடித்திருக்கிறார். அசுரன் திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க : ஆழம் தெரியாம விட்டுடோங்க! நீதிமன்றம் வரை சென்ற சந்தானம் படம் – 4 வருஷமா இப்படி ஒரு பிரச்சினையா?
ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறாராம். அதன் பிறகு விவேக்குடன் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்தாராம் தேவி ஸ்ரீ. அதன் காரணமாகவே இதுவரை வடிவேலு தேவிஸ்ரீயை தன் படத்தில் நடிக்க அழைக்கவே இல்லையாம். காரணம் விவேக் படத்தில் நடித்ததனால் என்று கூறினார்.
நாய் சேகர் படத்தில் கூட தேவி ஸ்ரீ வடிவேலுவுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டாராம். அப்போது இவர் யார் என்று தெரியாத அளவிற்கு பேசினாராம் வடிவேலு. அதன் பிறகு இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொன்ன பிறகுதான் ஓ குண்டச்சியா என கேட்டாராம். இவர் ஆம் என்று சொன்னதும் சரி சரி ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டாராம் வடிவேலு.
இதையும் படிங்க : திருமணம் செய்து கொள்ளாத அந்தக் கால மூன்று நடிகைகள்.. யார் யார் தெரியுமா?..
அதன் பிறகு தான் வடிவேலுவை பற்றி எல்லா விவரங்களும் தனக்குத் தெரியும் என தேவி ஸ்ரீ கூறினார். ஆனால் முதலில் அவரைப் பற்றி நல்லவிதமாக தான் நினைத்திருந்தேன் என்றும் இப்பொழுது அவர் நடந்து கொண்டிருக்கும் விதம் தன்னை கொஞ்சம் அதிருப்தி அடைய வைக்கிறது என்றும் கூறினார்.