‘ஆசை’ படத்தில் எங்களால் அவமானப்பட்ட அஜித்! செய்த தவறை எண்ணி வருத்தப்படும் இயக்குனர்

by Rohini |
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்த இடத்தில் விஜயும் அஜித்தும் தான் இருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி , ரஜினி, கமல் இவர்கள் வரிசையில் இப்போது அஜித் இருக்கிறார் என்றால் அது தமிழ் சினிமாவில் ஒரு ஆச்சரியமாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த பல வருடங்களாக எந்த விழாக்களிலும் அஜித்தை பார்க்க முடிவதில்லை. எந்த ஒரு பொது மேடைகளிலும் அஜித் கலந்து கொள்வதுமில்லை. அப்படி இருக்கும் போதும் அஜித் மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பை கொட்டி வருகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காஜி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் ஜான்வி…

ஆரம்பகாலங்களில் அஜித் பேசும் தமிழை பார்த்து விமர்சிக்காதவர்களே இல்லை. பல தோல்விப் படங்களை கொடுத்தும் வந்தார். ஆசை படத்தில் நடிக்கும் போதுகூட பிரகாஷ் ராஜிடம் அஜித் நான் நன்றாக நடிக்கிறேனா என்று கேட்பாராம். அந்தளவுக்கு சினிமா மீது வெறி கொண்டுதான் இருந்திருக்கிறார் அஜித்.

இந்த நிலையில் இயக்குனர் மணிபாரதியும் ஆசை படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார். ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தவர். அதனால் அஜித்தை மணிபாரதியும் இயக்குனர் மாரிமுத்துவும் கண்டுக் கொள்ளவே மாட்டார்களாம்.

இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?

பிரகாஷ் ராஜ் கூட இருந்தால் ஒருவேளை வருங்காலத்தில் எதாவது பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவருடனேயே தான் சுற்றி கொண்டிருந்தார்களாம். அஜித்தே இவர்கள் இருவரையும் தானாகவே வந்து அழைப்பாராம். இருந்தாலும் அஜித்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்களாம்.

பிரகாஷ்ராஜ் அறையில் இருப்பது, அவருடன் உரையாடுவது என இருப்பார்களாம். ஆனால் இப்போது அஜித்தின் வளர்ச்சியை பார்க்கும் போது நாங்கள் அன்று செய்ததுதான் நியாபகம் வருகிறது என கூறினார்.

Next Story