அந்த பாடல் வரிகளை நான் பாட முடியாது.. அடம் பிடித்த இளையராஜா.. கடைசியில் அந்த பாட்டு ஹிட்டாம்..!

Published on: December 22, 2023
---Advertisement---

Ilayaraja: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பொதுவாகவே எல்லாரிடமும் சகஜமாக பழகாதவர். அவருக்கு இருக்கும் திறமை பேசப்படுவது போல அவரின் கோப குணமும் அவ்வப்போது வைரலாகும். இது இப்போது மட்டும் அல்ல பல வருடமாகவே தன்னுடைய படங்களில் செய்து வந்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. 

பாக்கியராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அப்படம் நல்ல வரவேற்பை பெற அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் கொடுத்தது. அந்த படத்திற்கெல்லாம் கங்கை அமரன் இசையமைத்தார். இன்னும் சில படங்களுக்கு சங்கர் கணேஷும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இசையமைத்து இருந்தனர்.

இதையும் படிங்க: வைரலாக நினைத்து மோசமா இறங்கிய பிக்பாஸ் தனலட்சுமி.. ஏம்மா நீ இன்னும் திருந்தவே இல்லையா..

இளையராஜா விடியும் வரை காத்திரு, இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு என மூன்று படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை. இதனால் இந்த கூட்டணி ஹிட் இல்லாமல் இருந்தது.

இந்த நேரத்தில் தான் பாக்கியராஜ் முந்தானை முடிச்சு படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தினை ஏவிஎம் தயாரிக்க இருந்தது. இப்படத்திற்கு கங்கை அமரனை போடலாம் என்பது பாக்கியராஜின் ஐடியா. ஆனால் ஏவிஎம்மோ இப்படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்றனராம். சரியென அவரிடம் போக நீங்க என் தம்பிக்கிட்ட தானே போனீங்க?

அதனால் நான் இசையமைக்க மாட்டேன் என மறுத்துவிட்டார். இது என்னடா வம்பா போச்சு என கடைசியாக போராடி ஒப்புக்கொள்ள வைத்து இருக்கின்றனர். ஆரம்பமே பிரச்னையாக தொடங்க இசையமைப்பிலும் சில சண்டைகள் நடந்ததாம். பாக்கியராஜ் தயாரிப்பு குழு யாரும் இசையமைப்புக்கு வரக்கூடாது என கண்டிஷன் போட்டு இருந்தாராம்.

இதையும் படிங்க: எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி! நடக்காதுனு தெரிஞ்சு சொல்றது எவ்ளோ புத்திசாலித்தனம் – விஜயை விளாசும் தயாரிப்பாளர்

பாக்கியராஜுக்கு அய்யோடா என ஆகிவிட்டதாம். கடைசியில் அந்த பாட்டை மாமன் வந்தானுக்கு பதில் தந்தானானே என மாற்றி அவர் பாட அதுவும் நல்லா இருக்கு என அப்படியே விட்டு இருக்கிறது படக்குழு. கடைசியில் பாடலும் ஹிட். இந்த கூட்டணிக்கு அமைந்த முதல் ஹிட் படமாகவும் மாறியது முந்தானை முடிச்சு.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.