More
Categories: Cinema History Cinema News latest news

நான் 5 லட்சமே பார்த்தது இல்ல… 15 லட்சமா? பாலசந்தருக்கே ‘ஷாக்’ கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

நான்லாம் 5 லட்சமே பார்த்தது இல்ல… 15 லட்சமா…ன்னு பாலசந்தரே டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அதிர்ச்சியுடன் கேட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுபற்றி கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றில் இப்படி சொல்லி இருக்கிறார். பார்க்கலாமா….

முத்து படத்துக்கு தயாரிப்பாளர் பாலசந்தர். அதுக்கு முன்னாடி 12 லட்சம் வாங்கினேன்னு ரஜினிசார் கிட்ட சொன்னேன். உடனே அவரு 15 லட்சம்னு போட்டுக் கொடுத்துட்டாரு. நாட்டாமை பத்தாவது படம். எனக்கு 5 லட்ச ரூபாய். அப்படியே பார்த்துக்கிட்டு இருந்தாரு பாலசந்தர். ‘என்னடா உனக்கு சம்பளம் 15 லட்சம்னு போட்டுருக்கு?’ன்னு கேட்டாரு. நான் ’12 லட்சம் வாங்கினேன்’னு சொன்னேன். ‘பில் போட்டுக் கொடுத்துட்டாங்கடா…’ன்னாரு.

Advertising
Advertising

இதையும் படிங்க… பகுத்தறிவு கட்சியில் இருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஜோதிட நம்பிக்கை!.. ஆச்சர்ய தகவல்!..

‘நான் இதுவரை 5 லட்சமே பார்த்தது இல்ல. 15 லட்சம் கேட்கறீயா? எத்தனாவது படம்?’னு கேட்டார். ’13வது படம்’. ’13வது படத்துக்கே 15 லட்சமா..?’ என மீண்டும் பாலசந்தர் அதிர்ச்சியுடன் கேட்க… ‘நான் 12 லட்சம் தான் வாங்கினேன்’னு சொன்னேன். அவரு 15 லட்சம் போட்டுட்டாரு’ன்னு சொன்னேன். ‘சரி. சரி. அவன் எழுதிக் கொடுத்துட்டான். நான் என்ன பண்றது?’ன்னு ‘டிக்’ பண்ணினார்.

நான் எதுக்கு சொல்றேன்னா அந்த 15 லட்சத்தை விட்டுருங்க. இன்னைக்கு 3வது படத்திலயே 3 கோடி வாங்குறாங்க. 5 கோடி வாங்குறாங்கன்னு நான் பொறாமைப்படக்கூடாது. அன்னைக்கு பாலசந்தர் சாரே அப்படி கேட்டுட்டாரு. அன்னைக்கு இருக்குற நிலைமைல எனக்கு 15 லட்சம் கொடுத்தது பெரிய விஷயமா இருக்கலாம்.

இன்னிக்கு இருக்குற புரொடியூசருக்கு இவங்களுக்குக் கொடுக்கறது பெரிய விஷயமா இருக்கும். விலையேற்றம், பணமதிப்பு எல்லாமே மாறிப்போச்சு. இதெல்லாம் இன்னிக்கு பெரிய விஷயம் இல்ல. எவ்வளவு ஆயிரம் கோடிகள் வாங்கினாலும் அதை விட பல லட்சம் கோடீஸ்வரர்கள் நம்ம நாட்டுல இருக்காங்க. ஒரு தடவை ஓட்டல் மாடில இருந்து முத்து படத்துக்கு டயலாக் எழுதிக்கிட்டு இருக்கும்போது ரஜினி சார் வந்தாரு. அங்க இருந்து பார்த்தாரு.

Muthu

‘எப்பா எவ்ளோ பில்டிங்ஸ்…! இதுல சினிமாக்காரங்க வீடு எவ்வளவு இருக்கும்?’னு கேட்டாரு. நான் வந்து அது சிவாஜி சார் வீடு. அது பக்கத்துல அவரு வீடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். இவ்ளோ தான் இல்ல. ஆனா இவங்கள பத்தித் தானே பேசறாங்க. மிச்ச இருக்குற பில்டிங்ஸ்ல யாரு இருக்கா? என்ன ஏதுன்னு யாருமே பேச மாட்டாங்க. படத்துல மட்டும் வாங்குனா, ‘அவ்ளோ வாங்குறானே, இவ்ளோ வாங்குறானே’ன்னு பேசறாங்க.

ஏன் 200 கோடி சம்பாதிக்கிற பணக்காரங்கலாம் இல்லையா? ஒரு வருஷத்துக்கு…. 200 கோடியா, 2000 கோடி, 10 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்களே… ஏன் அவனைப் பத்தி பேச மாட்டேங்குற? இவனுக்கு மார்க்கெட் இருக்குதுன்னு பேசறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
ராம் சுதன்

Recent Posts