மற்ற ஆண்களைத் தொட மாட்டேன் என்று சபதம் கொண்ட நடிகை! அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர் கையாண்ட யுத்தி

by Rohini |   ( Updated:2023-10-01 06:45:10  )
sundar
X

sundar

K.P.Sundharambal: தமிழ் திரையுலகில் இன்றைய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நடிகை நயன்தாரா திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 10 கோடி வரை அவரின் சம்பளம் இன்று உயர்ந்து விட்டது. ஆனால் 40கள் காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக கே.பி.சுந்தராம்பாள் இருந்தார்.

அன்றைய சூழலில் வெறும் 40000 ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருந்த படத்திற்கு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகையாக கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அதுவும் லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாகவும் விளங்கினார். அவரின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இதையும் படிங்க: சொதப்பி வரும் ஜெயம் ரவி!.. கடைசியா சோலோவா ஹிட்டு கொடுத்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா?..

அவரின் கணவர் கிட்டப்பா மறைவிற்கு பிறகு பாடுவதையும் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார் கே.பி.சுந்தராம்பாள். அப்போது பக்த நந்தனார் என்ற படத்தை கே.சுப்பிரமணியம் இயக்க அதில் சுப்புலட்சுமி என்ற நடிகையை இரட்டை வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது.

சுப்புலட்சுமி ஹீரோயின் வேடத்திலும் நந்தனார் என்ற ஆண் வேடத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த ஆண் வேடத்திற்கு சுந்தராம்பாள் நடித்தால் படம் மிகப்பெரிய வெற்றிப் பெறும் என்ற கணக்கை போட்டு வைத்திருந்தார் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அசந்தாஸ்.

இதையும் படிங்க: மீண்டும் ஒன்னா ஒரே நேரத்தில் விஜயும் அஜித்தும்! தல விரும்புவதும் அதுதானாம்!..

அதனால் அசந்தாஸ் சத்யமூர்த்தி என்பவரை அழைத்துக் கொண்டு சுந்தராம்பாளை காணச் சென்றார். சுந்தராம்பாளுக்கு சத்யமூர்த்தி மிகவும் வேண்டப்பட்டவர். ஒரு வேளை அசந்தாஸ் சொல்லி சுந்தராம்பாள் முடியாது என சொல்லிவிட்டால் சத்யமூர்த்தியின் செல்வாக்கை பயன்படுத்தியாவது சுந்தராம்பாளை நடிக்க வைத்து விடலாம் என்று எண்ணியே அழைத்துச் சென்றார்.

சொன்னப்படி சுந்தராம்பாள் முதலில் முடியாது என்று தான் சொல்லியிருக்கிறார். காரணம் கணவன் இறந்த பிறகு இனி எந்த ஆணையும் தொட்டு நடிக்க மாட்டேன் என்று சபதம் கொண்டிருந்தாராம் சுந்தராம்பாள்.ஆனால் இந்தப் படத்தில் வேறு எந்த ஆணையும் தொட்டு நடிக்க வேண்டிய அவசியமே வராது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: வா செல்லம் நீ வந்தாதான் களை கட்டும்!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்…

இருந்தாலும் எப்படியாவது இதை மறுக்க வேண்டுமே என்று தன் சம்பளத்தை ஒரு லட்சமாக கேட்டிருக்கிறார் சுந்தராம்பாள். அதிகமாக கேட்டால் போய்விடுவார்கள் என்று எண்ணிய சுந்தராம்பாளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் தயாரிப்பாளர் அசந்தாஸ் அந்த ஒரு லட்ச ரூபாயையும் கொடுக்க முன்வந்தார்.

கடைசியில் மூன்று லட்சம் பட்ஜெட்டில் பக்த நந்தனார் படம் தயாரிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு கே.பி.சுந்தராம்பாளுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தன்னை சினிமாவில் ஒரு லட்சிய நடிகையாக பிரதிபலித்துக் கொண்டார் கே.பி.சுந்தராம்பாள்.

Next Story