Cinema News
எதிர்பார்த்து நான் எதுவும் பண்ணலை… சிவா மூக்கை உடைத்த தனுஷ்… முடிச்சிவிட்டாரே!
சிவகார்த்திகேயன் இன்று பேசி இருக்கும் விஷயம் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் பேசி இருக்கும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் தனுஷ். 3 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் கல்லா கட்டுவார் என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் அவரை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். முதல் படமே சிவகார்த்திகேயன் சினிமா கேரியரை பெரிய அளவில் வளர்க உதவி செய்தது.
இதையும் படிங்க: ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..
அன்றிலிருந்து சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் தான் வாழ்க்கை கொடுத்ததாக பல இடங்களிலும் பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருந்தும் சிவகார்த்திகேயன் எந்த இடத்திலும் தன்னை வளர்த்து விட்டது தனுஷ் என்பதை குறிப்பிடாமல் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகவும் செய்தார்.
இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நான் யாரையும் கண்டுபிடித்து சினிமாவிற்கு அழைத்து வந்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்பதை சொல்லிக் கொள்ள மாட்டேன். ஏனெனில் என்னை அப்படித்தான் வாழ்க்கை கொடுத்ததாக சொல்லி சொல்லியே பழக்கப்படுத்தி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரி ஆள் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு காதல் கதையா? மனைவி தெரிஞ்சு என்ன பண்ணாங்க தெரியுமா?
இதில் தனுஷ் ரசிகர்கள் பெரிய அளவில் கோபமடைந்துள்ளனர். தொடர்ந்து சிவகார்த்திகேயனை எதிராக பல வீடியோக்களை பகிர்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், தனுஷின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நான் யாருக்கும் எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை. நான் செய்த எதையும் தப்பாகவும் தற்போது வரை கருதவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை வைரல் ஆகி வரும் தனுஷ் ரசிகர்கள் மேடையில் என்றுமே தனுஷ் வாழ்க்கை கொடுத்ததாக சொல்லிக்கொண்டதே இல்லை. அவருக்கு நன்றி சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி அவரை சங்கடப்படுத்துவது போல சிவகார்த்திகேயன் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் தான் அவருக்கு வாழ்க்கை பிச்சை கொடுத்தது தனுஷ் எனத் தொடர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும் ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
தனுஷ் வீடியோ: https://x.com/MaariBala_Offl/status/1823269738228908315