நடிகையின் பாலியல் புகார்!.. ரியாஸ்கான் பதில் இதுதான்!.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!...
Riyaskhan: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் கட்டதுரை என்ற கேரக்டர் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ரியாஸ்கான். இவர் தமிழில் பழம்பெரும் நடிகையின் மகள் உமா ரியாசை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!…
இதில் மூத்த மகன் ஷாரிக்கிற்கு சமீபத்தில் அவருடைய நீண்ட கால காதலி ஜெனிபருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் முடிவதற்குள் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரேவதி ரியாஸ் கான் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், தகாத உறவுக்கு அழைத்தும் போனில் அத்துமீறி பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் வராத பட்சத்தில் தன்னுடைய தோழி யாரும் உடன்பட்டால் அவரையும் தகாத உறவுக்கு அழைத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் உடன் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, எனக்கு அந்த நடிகை யார் என்பதே தெரியாது. அவருடன் நான் போனில் பேசியதே இல்லை. இந்த தகவலை நானும் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அந்த பெண்ணை தனக்கு அவரை தெரியாது.
இதையும் படிங்க: நகுல் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாராம்! நடந்தது என்ன? படத்தில் நடிச்சவரே சொன்ன விஷயம்
அடுத்து கொடுத்த பேட்டியில் தான் என்னுடைய பெயரை ரியாஸ் கான் என்றே அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எதுவரை விசாரணை குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. என்னை யாரும் கேட்டால் கண்டிப்பாக நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் ரியாஸ்கான் தெரிவித்து இருக்கிறார்.