கஜினி கதை எனக்கு சுத்தமா பிடிக்கலே – சூர்யாவிடமே அலட்சியமாக சொல்லி ஷாக் தந்த பிரபல நடிகர்

Published on: June 4, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா, முன்னணி நடிகர்களில் ஒருவர். விஜய், அஜித்குமார் வரிசையில் மூன்றாவதாக இருப்பவர். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன். நடிகர் கார்த்தி, இவரது தம்பி என்பதும் அனைவரும் அறிந்ததே. துவக்கத்தில், வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில், அறிமுகமானார்.

சூர்யா
Surya

திருப்புமுனை தந்த கஜினி

அதன்பின், படிப்படியாக நடித்து வளர்ந்தார். பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். ஆயுத எழுத்து, கஜினி, சிங்கம், பேரழகன், வேல், ஏழாம் அறிவு, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து, டாப் ஹீரோக்களில் ஒருவரானார். இப்போது, அவரது நடிப்பில் வாடிவாசல் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது.
சூர்யா சினிமா வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கஜினி. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்ததை மறந்துவிடும் நிலையில், தனது காதலியை (அசின்) கொன்றவர்களை பழிவாங்கும் ஒரு கேரக்டரில், சஞ்சய் ராமசாமியாக சூர்யா வாழ்ந்து இருந்தார். இந்த படத்தில், நயன்தாராவும் நடித்திருந்தார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படம், செம ஹிட் ஆனது. அதன்பின்பே, சூர்யா பெரிய நடிகர்களில் வரிசையில் இடம்பிடித்தார்.

சூர்யா
Surya

மாதவன் – சூர்யா வீடியோ கால்

இந்நிலையில், சமீபத்தில் மாதவன், சூர்யா இருவரும் வீடியோகாலில் பேசிக்கொள்ளும் ஒரு கிளிப்பிங் வெளியாகி இருக்கிறது. இதில், மாதவன் சூர்யாவிடம் பேச, அதை சிரித்தபடி, ஆமோதித்தபடி சூர்யா கேட்டுக்கொண்டு சிரிக்கிறார்.
அதில் மாதவன் பேசுகையில், நான் ஒரு காலத்தில் ஜாலியா இருந்தேன். நேருக்கு நேர் படம் பண்ணும்போது, உங்களுக்கு நிறைய அட்வைஸ் பண்ணி இருக்கேன். இப்படி இருக்கணும், அப்படி செய்யணுமுன்னு நிறைய சொல்லி இருக்கேன். அப்புறம், நாம ரெண்டு பேரும் மணிரத்னம் சார் கிட்ட ஒர்க் பண்ணினோம். அப்போ, நமக்குள்ள நிறைய பழக ஆரம்பிச்சோம்.அப்பவெல்லாம், நிறைய படங்கள் நல்லா ஓடீட்டு இருந்துச்சு.நல்லா படங்கள் ஓடுறது சந்தோஷமா, ஜாலியா இருந்துச்சு.

சூர்யா
Surya

கஜினி கதை எனக்கு பிடிக்கலே

ரன், அன்பே சிவம் படங்களில் நடிச்சப்போ பேரும், புகழும் கிடைச்சுது. சந்தோஷமா இருந்துச்சு. அப்போ, கஜினின்னு ஒரு படம் எனக்கு ஆபர் பண்ணுனாங்க.அந்த கதை எனக்கு புடிக்காம போயி, முருகதாஸ் கிட்ட சார் இந்த கதையில நடிக்க எனக்கு உடன்பாடு இல்லேன்னு சொல்லிட்டேன். அப்புறம் அங்க இங்க சுத்தி, கடைசியா அது உங்க கைக்கு வந்துடுச்சு.காக்க காக்க படத்துல உங்களை நான் பார்த்திருந்தேன். அதனால, கரெக்டான ஆள்கிட்ட கஜினி போயிருக்குன்னு நான் நினைச்சேன். அதை நீங்க ப்ரூப் பண்ணிட்டீங்க. ஐ யம் சோ ஹேப்பி என்று மாதவன், சூர்யாவை பாராட்டி இருக்கிறார்.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.