சூர்யாவை எனக்கு சுத்தமா பிடிக்காது!.. அதுல என்ன தப்பு?.. கொந்தளிக்கும் பிரபல பத்திரிக்கையாளர்…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. என்னதான் தன் தந்தை ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் சினிமாவிற்குள் வருவதற்கு இவர் போராடிய போராட்டங்கள் ஏராளம்.
அனைவரும் சூர்யாவை விமர்சித்த நிலையிலும் மனம் தளராது தன்னுடைய முயற்சியாலும் கடும் உழைப்பாலும் இன்று இந்தியாவே போற்றக்கூடிய நடிகராக வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் வலைப்பேச்சு புகழ் அந்தனன் சூர்யாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
டிவிட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சூர்யா
அதாவது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை போட்டு நெட்டிசன்கள் கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார்களாம். காரணம் அவர் மும்பையில் வீடு வாங்கியதன் விளைவு தான். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா பாலிவுட்டில் கவனம் செலுத்த உள்ளதாகவும் சூர்யா குடும்பத்துடன் அங்கேயே இருக்க போவதாகவும் நினைத்து நெட்டிசன்கள் பலரும் வடக்கன் ஆகிவிட்டாரா சூர்யா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கீழடியில் சூர்யாவின் தவறு
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தன் குடும்பத்துடன் கீழடி சென்று அங்குள்ள அதியங்களை பார்த்து மகிழ்ந்தார். அங்கு இருக்கும் ஒரு தொகுதியின் எம்.பி. தான் சூர்யாவை அழைத்து சென்றனர். அதுவும் முறையாக டிக்கெட் வாங்காமல் சென்றாராம் சூர்யா. மேலும் இவர் சென்றதன் விளைவாக கடும் வெயிலில் சுற்றுலா பார்க்க வந்த பள்ளி மாணவிகள் பலரும் வெயிலிலேயே நிற்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவமும் வைரலாகி வந்தது.
சூர்யாவை சுத்தமாக பிடிக்காது
இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ஏன் சூர்யா மும்பையில் வீடு வாங்கக் கூடாதா? படப்பிடிப்பு சமயத்தில் சென்னை வந்து வந்து செல்வார். அதில் உங்களுக்கு எதுக்கு வலிக்குது என மிகவும் கோபத்துடன் பேசினார். மேலும் கூறும்போது ‘ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது, ஏனெனில் அவரின் நடிப்பில் ஓவர் ஆட்டிடியூட் இருக்கும், அதனால சுத்தமாக பிடிக்காது, ஆனால் ஒரு மனிதராக சூர்யா மிகவும் நல்லவர்’ என்று கூறினார்.
5000 குழந்தைகளை வாழ வைத்தவர்
பெரும்பாலான நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை எங்கெங்கேயோ போய் கொட்டுகின்றனர். ஆனால் சூர்யா மட்டும் தான் பெரும்பகுதி சம்பளத்தை தான் நடத்தி வரும் அகரம் கட்டளையில் செலவிடுகின்றாராம். அதுமட்டுமில்லாம் அகரம் கட்டளையின் மூலம் கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவிகள் பயன்பட்டிருக்கின்றனராம்.
இப்படி சமூகத்தில் அக்கறை கொண்ட சூர்யாவை இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிப்பது தவறு இல்லையா? என்று அந்தனன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திடீரென வைரலாகும் விக்ரமின் ட்விட்டர் பதிவு!.. தோனியை விமர்சித்த சீயான்..