இதுக்காக நாலாவது பிள்ளை பெத்துக்குறேன்… வீர தீர சூரனுக்காக சுராஜ் இறங்கி பண்ணுறாருப்பா!

Veera Dheera Sooran
Suraj: மலையாளத்தில் பிரபல நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்திருக்கும் அவர் நேற்று டிரெய்லர் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் வீர தீர சூரன். ஆனால் இந்த படம் மற்ற படங்கள் போல இல்லாமல் இரண்டாம் பாகம் முதலாக ரிலீஸாக பின்னரே முதல் பாகம் ரிலீஸாக இருக்கிறது.
சீயான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் முதல் பாடல்கள் வரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Veera Dheera Sooran
அவர் கூறுகையில், எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகிட்டு. கைதட்டுங்க. நான் முதல் பிள்ளையை பெற்றேன். அப்போது எனக்கு மாநில விருது கிடைச்சிது. அடுத்து இரண்டாம் பிள்ளையை பெற்றேன். உடனே அடுத்த மாநில விருதும் கிடைச்சிட்டு.
Also Read: வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன்… அதிர்ச்சியில் நிற்கும் குடும்பம்… என்ன நடக்க போகுதோ?
அடடா இது நல்லா இருக்கே என நினைச்சேன். உடனே மூன்றாவது பிள்ளையை பெற்றேன். மாநில விருதுடன் நேஷனல் விருதும் கிடைத்தது. எனக்கு இப்போ ஆஸ்கார் விருது தரேனு சொன்னா நான் உடனே நான்காவது பிள்ளையை பெத்துக்குவேன். என் மனைவியிடம் சொல்லிடுறேன் எனக் கலாய்த்து இருக்கிறார்.
சுராஜ் குணசித்திர வேடங்கள் மலையாளத்தில் ஹிட்டடித்த நிலையில் தற்போது தமிழ் ரசிகர்களிடம் அவருக்கு பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. வீர தீர சூரனுக்கு பின்னர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.