எம்ஜிஆரை தொடப்போய் அடி வெளுத்துட்டாங்க… உண்மையை சொன்ன அந்த பிரபலம்!

by Akhilan |
எம்ஜிஆரை தொடப்போய் அடி வெளுத்துட்டாங்க… உண்மையை சொன்ன அந்த பிரபலம்!
X

Ramarajan: தமிழ் சினிமாவில் பெரிய புகழை கொண்டு இருந்தவர் நடிகர் ராமராஜன். இயக்குனராக தொடங்கிய அவர் சினிமா வாழ்க்கை பின்னர் நடிகராக உயர்ந்தார். தற்போது சினிமாவில் ஒதுங்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார்.

மதுரையை சேர்ந்தவர் ராமராஜன். டூரிங் டாக்கீஸில் வேலை. பின்னர் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலை என தொடர்ச்சியாக எதுவும் வேலை செய்துக்கொண்டே இருந்தார். அந்த தியேட்டர் முதலாளியின் சிபாரிசால் சென்னை வந்து சில பிரபலங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..

இதை தொடர்ந்து, ராமராஜனுக்கு கோலிவுட்டில் ஒரு அடையாளம் கிடைத்தது. கரகாட்டக்காரன் வெற்றியை தொடர்ந்து தற்போது சாமானியன் படத்தில் நடித்து வருகிறார். இவரின் வெற்றி இசையமைப்பாளரான இளையராஜா தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

சினிமா மீது இருந்த அதே ஆர்வம். ராமராஜனுக்கு அரசியல் மீதும் எம்.ஜி.ஆர் மேலேவும் இருந்தது. அவர் தலைமையில் தான் தன்னுடைய முன்னாள் மனைவி நளினியை கல்யாணம் செய்து கொண்டார். பிரபலமாவதற்கு முன்னரே அவரை நேரில் பார்க்க பெரிய அளவில் முயற்சி செய்வாராம்.

இதையும் படிங்க: வீட்டுக்கு வந்த ரவி, ஸ்ருதி… ஷாக்கான ரோகிணி… இன்னொரு கலவரத்தை எதிர்பார்க்குறோம் பாஸ்!

Next Story