ரஜினியால எனக்கு கிடைச்ச பெருமை! கொஞ்சமும் எதிர்பார்க்கல – நெகிழும் நெப்போலியன்!..

Published on: November 11, 2023
nepo
---Advertisement---

Nepolean: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். தன்னுடைய  முதல் படத்தில் 21 வயதிலேயே 60வயது மதிக்கத்தக்க கேரக்டரில் நடித்து ஆச்சரியப்படுத்தியவர். யாருப்பா இந்த பெரியவர் என்றுதான் அனைவரும் கேட்டார்களாம். அதன் பிறகுதான் தெரிந்தது அவர் 21வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று.

அந்தளவுக்கு தத்ரூபமாக கேரக்டரோடு ஒன்றி நடிக்கக் கூடியவர் நெப்போலியன். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த நெப்போலியனுக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து  நடித்த எஜமான் திரைப்படத்தில் இருந்துதான்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

வல்லவராயனாக அனைவரையும் தன் மிரட்டு பேச்சால் அலரவைத்தார். ஆனால் முதலில் இந்த கேரக்டருக்கு நெப்போலியனை நடிக்க வைக்க ரஜினி தயங்கினாராம். அதன் பிறகு அனைவரும் சொல்லி சமாதானம் செய்தபின்னரே ரஜினி சம்மதிக்கிறார்.

ஆனால் படம் முடிந்த பிறகு நெப்போலியனை கட்டியணைத்து ரஜினி பாராட்டினாராம். எஜமான் படம் நெப்போலியனை எந்தளவு உயரத்திற்கு கொண்டு சென்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகத்தான்  மலையாளத்திலும் நடிக்க வாய்ப்பு வந்ததாம் நெப்போலியனுக்கு.

இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

அதுவும் மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்த நெப்போலியனை ‘ரஜினி கூட நடித்தவர். ரஜினிக்கு வில்லனாக வெயிட்டான கதாபாத்திரத்தில் கலக்கியவர்’ என்று குறிப்பிட்டுத்தான் மலையாள சினிமா நெப்போலியனை அணுகியதாம்.

ரஜினி கூட நடித்ததனால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என நெப்போலியன் கூறினார். தொடர்ந்து வில்லனாக நடித்த நெப்போலியன் முதன் முதலில் சீவலப்பேரி படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

அதனை அடுத்து எட்டுப்பட்டி ராசா போன்ற ஒரு சில கிராமத்து மண் சார்ந்த படங்களில் நடித்து மக்களின் அமோக ஆதரவையும் பெற்றார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.