சினேகா சரியான கோல்மூட்டி.. அவரால் ஆட்டோகிராப் வாய்ப்பை இழந்தேன்.. ஷாக் கொடுத்த பிரபலம்

0
4143

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமான ஆட்டோகிராப். இப்படம் சின்ன பட்ஜெட் என்றாலும் பெரிய வெற்றியை பெற்றது. ஆட்டோகிராப் படத்தை சேரன் இயக்கி நடித்திருந்தார். அவருடன் கோபிகா, சினேகா ஆகிய கதாநாயகிகள் நடித்திருந்தனர். படத்தில் காதலையும், நட்பின் ஆழத்தை அழகாக சொல்லி அப்ளாஸ் வாங்கி இருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பை நடிகை சினேகாவால் தான் இழந்தேன் என இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்து இருக்கிறார். சேரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். முதலில் பாண்டவர் பூமி படத்தில் இருந்து அவரிடம் பணிபுரிந்து வந்திருக்கிறார். சம்பளம், பேட்டா இல்லாமல் சேரனிடம் வேலை செய்தாலும், அனுபவத்திற்காக அவரிடம் பணிபுரிந்தேன். ஆனால் செமையாக திட்டுவார்.

ஒருமுறை அவர் என்னை டோஸ் விட அந்த கடுப்பை யாரிடம் காட்டிவது எனத் தெரியாமல் டிரைவரிடம் நானும் கோபத்தை காட்டி விட்டேன். அவர் போய், சினேகாவிடம் தனியாக ஒரு திரைக்கதையை ஓட்டிவிட்டான். தப்பும் தவறாக கதை விட அதை வைத்து சினேகா என் மீது சேரனிடம் புகார் தெரிவித்துவிட்டார்.

இயக்குனர் சேரனும் என் தரப்பு நியாயத்தை கேட்காமலே 200 பேர் சுற்றி இருக்க கண்ணாப்பின்னாவென திட்டி விட்டார். எனக்கும் தன்மானம் தலை தூக்கியது. ஒரு தம்பியாகவும், உதவி இயக்குனராகவும் இருந்தேன். ஆனால் அந்த உறவு ஒரு நடிகையால் உடைந்தது. இந்நிகழ்வு என்னை வெகுவாக பாதித்தது. நடந்தே அலுவலகம் வந்தேன். என்ன செய்வது எனக்கு தெரியவில்லை. உடனே, தங்கர்பச்சான் சாரிடம் கால் செய்து உதவி இயக்குனருக்கான வாய்ப்பு எதுவும் இருக்கிறதா எனக் கேட்டேன். அவரும் வாப்பா வந்தா நல்லா இருக்கும் எனக் கூறினார். அப்படியே, அழகி படத்தில் அவரிடம் இணைந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

google news