நான் எவ்வளவோ கெஞ்சியும் ஒத்துக்கவே இல்லை!. அதனாலதான் அப்படி ஆச்சி!.. புலம்பும் ஜி.வி.பிரகாஷ்..

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பென்சில், டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஜெயில், பேட்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக திட்டம் இரண்டு படத்தின் இயக்குநர் விக்னஷ் கார்த்திக் இயக்த்தல், நடிகை கௌரி கிஷனுடன் இணைந்து அடியே என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. பேரலல் யுனிவர்ஸ் என்ற வித்யாசமான கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர், டீசர் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் தனக்கு ஒரு சில படங்களில் கதை பிடித்திருந்தாலும், வேறு சில காரணங்களால், அந்த படம் தன் கையை விட்டு சென்றது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- வெற்றிமாறன் படத்துல நான் நடிச்சிருக்க வேண்டியது… கடைசி நேரத்துல அப்படி ஆகிடுச்சி… புலம்பிய ஜி.வி.பிரகாஷ்
குறிப்பாக கோமாளி படத்தின் கதையை கேட்டேன் எனக்கு அது பிடித்திருந்தது. ஆனால் நடிக்கமுடியாமல் ஆகிவிட்டது. ஆனால் ஜெயம் ரவி, மிக நன்றாக நடித்திருந்தார். அவர் எனக்கு நல்ல நண்பர். அதே போல தான் மரகத நாணயம் படத்திலும் நான் நடிக்கவேண்டியது. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் அவர்கள் உடனே, அடுத்த வாரமே படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்கள். நான் படத்தின் தயாரிப்பாளர் தில்லி பாபுவிடம் பல முறை கேட்டுப்பார்த்தேன். ஒரு 40 நாள் அவகாசம் கொடுங்கள். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதை முடித்த உடனேயே வந்துவடுகிறேன் என்று கூறினார்.
ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. அதனால் தான் அந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டேன். எனக்கு கதை பிடித்து, நான் நடிக்க ஓகே சொல்லி, மற்ற பிரச்சனைகளால் கைமாறி போனால் வருத்தப்படுவேன். எனக்கு கதை பிடிக்காமல், நான் மறுத்திருந்தால், அந்த படத்தை நினைத்து கவலைப்பட மாட்டேன் என்று ஜி.வி.பிராகஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ஜெய்லர் ஹிட் அடிச்சது தப்பு… ரஜினி சோலி முடிய போகுது… பகீர் கிளப்பும் ஜோசியர்..