எனக்கு ரொமான்ஸ் வரும் போது இந்த நடிகரை தான் நினைப்பேன்!.. புருஷனை பக்கத்துல வச்சுட்டே இப்படி சொல்லலாமா?..
தமிழ் சினிமாவில் 90களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. அந்தக் காலத்தில் இயக்குனர்களின் சொல்படி கேட்டு தயாரிப்பாளர்களின் மனம் நோகாதவாறு நடந்து கொண்ட மிக முக்கிய நடிகைகளில் குறிப்பிடத்தகுந்தவர் நடிகை குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அறிமுகமான அந்த படத்திலேயே கோடான கோடி ரசிகர்களை சம்பாதித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த குஷ்பூ 90களில் முன்னனி நடிகையாக மாறினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் தன் திறமையை நிரூபித்தார். கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். முறைமாமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் சுந்தர் .சியுடன்
காதல் ஏற்பட்டது.
அதன் பின் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பூ அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் ஏற்கெனவே கணவர் சுந்தர்.சியை பற்றி ஏராளமான பேட்டிகளில் கூறிவரும் குஷ்பூ,
அவருக்கு ரொமான்ஸ் என்றாலே தெரியாது என பல முறை கூறியிருக்கிறார். மேலும் ரொமான்ஸ் என்ற வார்த்தையில் முதல் எழுத்து ஆர் என்பதும் அவருக்கு தெரியாது என்று பல முறை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நானாகத்தான் போய் ரொமான்ஸ் செய்வேன் என்றும் அவருக்கும் இருக்கு ஆனால் அதை வெளிக்காட்ட தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சுஹாசினி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் மோஸ்ட் ரொமான்ஸ் விருது யாருக்கு கொடுக்கப்படலாம் என்று கேட்டு அதற்கான ஆப்ஷன்ஸ் நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் கார்த்திக், சுந்தர்.சி ஆகியோரின் புகைப்படங்கள்
கொடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த குஷ்பூ சந்தேகமே இல்லை, நடிகர் கார்த்திக் தான், எனக்கு ரொமான்ஸ் வரும் போதெல்லாம் ஐ லவ் கார்த்திக் என்று சொல்லிவிட்டு அவரின் புகைப்படத்தை பார்த்து முத்தமும் கொடுத்தார். ஆனால் கார்த்திக்கின் அருகில்
அவரின் கணவர் புகைப்படமும் இருந்தது. அதை கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.