பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் ஒவ்வொரு சீசன்களில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் யாராவது ஒருவர் காதலிக்க தொடங்கி விடுகிறார்கள்.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன்-5ல் பங்கேற்ற அமீர் அதில் பங்கேற்ற பாவனியை ஒரு தலையாக காதலித்து வந்தார். கணவரை இழந்த பாவனி – குடும்பத்தை இழந்த அமீர் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டனர். ஆனால், பாவனி அமீரின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவே இல்லை.
இந்த நிலையில் நேற்று அமீர் தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பாவனி அமீரை இறுக்கி அணைத்து கொண்ட நெருக்கமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதையும் படியுங்களேன்- கல்யாணத்துக்கு நோ… முரண்டு பிடிக்கும் சரத்குமார் மகள்.. விஷாலமான நடிகர் நினைப்பு இருக்கும் போல…
அதில் “என் வாழ்வில் நீ வந்ததற்கு மிகவும் நன்றி. தங்கமான இதயம் கொண்ட மனிதன். எல்லா நேரத்திலும் என்னுடன் இருந்ததற்கு மிகப் பெரிய நன்றி அமீர். எப்போதுமே பிறருக்கு நல்லதே நினைக்கும் நல்லதே கொடுக்கும் உள்ளம் கொண்ட உனக்கு எப்போதுமே நல்லதே நடக்கும். இந்த பூமியில் நீ ஆசைப்பட்ட எல்லாமே உனக்கு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். ஐ லவ் யூ டா பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமீர்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதில் “ஐ லவ் யூ டா” என அவர் குறிப்பிட்டுள்ளது அமீரின் காதலுக்கு பாவனி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram