கவர்ச்சி காட்டி நடிச்சி அந்த படத்தோட வாய்ப்பு போச்சி!.. புலம்பும் பிரபல நடிகை....

by Akhilan |   ( Updated:2024-08-17 09:01:20  )
கவர்ச்சி காட்டி நடிச்சி அந்த படத்தோட வாய்ப்பு போச்சி!.. புலம்பும் பிரபல நடிகை....
X

Run: தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் வரிசையாக அமைவது சில நடிகைகளுக்கு தான் சாத்தியம். ஆனால் சிலருக்கோ கிடைக்கும் வாய்ப்பு கூட அவர் கேரியரால் மிஸ் செய்யும் நிலையும் ஏற்பட்டு விடும்.

ராசிகா என்ற பெயரில் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை சங்கீதா. ஆனால் அவர் தாத்தா எப்போதுமே போய் வாய்ப்புக்காக நிற்க கூடாது என்பதை கண்டிஷனாக போட்ட பின்னரே நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதை தொடர்ந்து வரும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் நடித்து நிரூபித்து இன்னொரு வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் என சங்கீதாவும் தாத்தா போட்ட ஆர்டரை ஓகே செய்கிறார்.

இதையும் படிங்க: நடிகரால் முட்டுக்கட்டையான கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங்.. என்னங்க இப்படி ஆச்சு?

அவருடைய சினிமாவின் ஆரம்பகாலக்கட்டத்தில் நிறைய பி கிரேட் படங்களில் நடித்தார். அதனால் அவருக்கு தொடர்ச்சியாக அதுப்போன்ற வாய்ப்புக்களே குவிந்தது. 7 வருடம் கிளாமர் நடிகையாக வலம்வந்தார். பின்னர் டபுள்ஸ் படம் மூலம் தன்னுடைய நடிகையாக நடிப்பில் நிரூபித்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு பிதாமகனில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. விக்ரமுக்கு ஜோடியாக அப்படத்தில் வாழ்ந்து காட்டினார் என்றே சொல்ல வேண்டும். இப்படத்திற்காக ஃபிலிம்பேர் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த துணைக்கான விருதுகளை வென்றார். அங்கு தொடங்கியது அவரின் வெற்றிப்பயணம்.

தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. நான் அவனில்லை, உயிர், மத்திய சென்னை, மன்மதன் அம்பு, காளை, நேபாளி உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றார். இருந்தும் சங்கீதாவிற்கு ஒரு மிகப்பெரிய படத்தின் வாய்ப்பும் தட்டி போய் இருக்கிறதாம். லிங்குசாமி இயக்கத்தில் ரன் படம் தயாராகி கொண்டு இருந்த போது நாயகி வேட்டை நடத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: மாயமான சூர்யா! ஸ்தம்பித்த படக்குழு.. சூர்யா 44ல் நடந்தது என்ன?

அப்போது ஒளிப்பதிவாளர் ஜீவா, சங்கீதாவை ஒரு ஷோவில் பார்த்து இவர் சரியாக இருப்பார் என பரிந்துரை செய்தாராம். அதேபோல, மாதவனும் மனோரமாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சங்கீதாவின் நடனத்தினை பார்த்து அவரும் இதே நடிகையை ஓகே செய்துவிடலாம் எனக் கூறி இருக்கிறார்.

இதை தொடர்ந்து சங்கீதாவும் ஆடிஷனுக்கு சென்று இருக்கிறார். எல்லாம் ஓகே ஆகிவிடும் என நம்பிக்கொண்டு இருந்த சூழலில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கால் வருகிறதாம். நீங்க பி கிரேட் படத்தில் நடிச்சிருக்கீங்களே எனக் கேட்க ஆமாம் என்றாராம் சங்கீதா. அச்சச்சோ அப்போ எங்க படத்துக்கு தப்பா போயிடும் எனக் கூறி மறுத்துவிட்டார்களாம். இதை சங்கீதா தன்னுடைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story