Ayothi: அயோத்தி படத்தின் கதையை முதலில் எனக்குதான் சொன்னார்கள். ஆனால் அந்த படத்தினை சில காரணங்களால் மிஸ் செய்ததாக பிரபல ஹீரோ தெரிவித்து இருப்பது வைரலாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அயோத்தி. இப்படத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, புகழ், யாஸ்பால் ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்தாண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷை காதலித்த எஸ்கே… கடைசியில் நடந்த பிரச்னை… விளாசும் பிரபலம்
என்.ஆர்.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார். சின்ன பட்ஜெட் படம் என்றாலும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இப்படத்தில் சசிகுமாரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. ஆனால் முதலில் அவருக்கு இந்த கதை செல்லவில்லையாம்.
நடிகர் ஆர்ஜே பாலாஜியிடம் இந்த கதை சொல்லி இருக்கிறார் மந்திர மூர்த்தி. அவருக்கும் கதை பிடித்துவிட ஷூட்டிங் தொடங்க காலதாமதம் ஆனது. எல்கேஜி படத்தினை முடித்திருந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் டீம் இந்த படம் லேட்டாகும் என்பதால் விலகலாம் என முடிவெடுத்தனராம்.
இதை தொடர்ந்து அந்த படத்தில் சசிகுமார் நடித்திருக்கிறார். அந்த படம் தனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. இருந்தும் சசிகுமார் நடித்த போது இன்னும் நன்றாக இருந்ததாகவும் ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சுந்தர்.சி.யைக் கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்… இதுக்கெல்லாமா திட்டுவாரு?

இப்படத்தினை அடுத்து சூர்யாவின் 45வது பட வேலைகளில் இறங்க இருக்கிறார். இப்படத்தில் சூர்யா மற்றும் திரிஷா பல வருடங்கள் கழித்து ஜோடி போட இருக்கின்றனர். இந்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
